”விஜயகாந்த் சாரோட ‘வல்லரசு’ படத்தில் நான் அறிமுக இயக்குநர். இந்தப் படத்துக்கு முன்னாடி கேப்டன், 120 படங்களுக்கு மேல நடிச்ச, பெரிய சூப்பர் ஸ்டார். நானோ, இந்தப் படத்துக்கு முன்னாடி கதாசிரியர். ரைட்டர் ஆக இருந்தாலும், முதன் முதலா படம் இயக்குகிறேன் என்றதும், லேசா படபடப்பாகிடுச்சு. என் பயத்தைப் பார்த்த அண்ணன் கேப்டன், ‘உன்னால பண்ண முடியும். தைரியமா பண்ணு’னு தோள்ல தட்டிக் கொடுத்து, என் பயத்தைப் போக்கினார். முதல் நாள் பூஜையுடன், படப்பிடிப்பும் ஆரம்பிக்கிற நாள். அரசியல் தலைவர்கள் தொடங்கி பல விஐபிகள் பூஜைக்கு வந்திருந்தாங்க. ஆனா, பூஜை அன்னைக்கு மாங்காடு கோவிலுக்கு நான் குடும்பத்தோட பூஜை பண்ணப் போயிருந்தேன். படப்பூஜை 9 மணிக்கு இருந்தது. மாங்காடுல பூஜையை முடிச்சிட்டு, என் படப்பூஜைக்கு சரியான நேரத்துல வந்திட முடியும்னு நினைச்சேன். ஆனா, வழியில ட்ராஃபிக் ஜாம்னால 11 மணி ஆகிடுச்சு. எனக்கு பயமாகிடுச்சு.

அன்னிக்கு காலகட்டத்துல கேப்டன் சூப்பர் ஸ்டார். நான் அறிமுக இயக்குநர். பூஜைக்கு விஐபிக்கள் காத்திருப்பாங்க. கேப்டன் என்ன சொல்வாரோ என பயந்துக்கிட்டே பூஜை நடக்கற இடத்துக்கு வர்றேன். ஆளாளுக்கு டைரக்டரை காணோம்னு சொல்றது என் காதுக்களுக்கும் கேட்க, பயம் இன்னும் அதிகமாகிடுச்சு. அங்கே என்னைப் பார்த்த கேப்டன், ‘வாப்பா, கோயிலுக்கு போயிட்டு வர்றீயா.. யாராவது வந்து எதுவும் கேட்டுடப்போறாங்க. அதுக்கு முன்னாடி நீ பேப்பரை எடுப்பா.. டயலாக்கை சொன்னா, டேக் போயிடலாம்’னு என்கிருந்த முழு பயத்தையும் போக்கிட்டார்.
+ There are no comments
Add yours