தமிழ் சினிமாவில் உள்ள பன்முக திறமை கொண்ட கலைஞர்களுள் ஒருவர், எஸ்.ஜே.சூர்யா. 1999ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமான இவர், தற்போது குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் வலம் வருகிறார். இவர், தனது காதல் தோல்வி குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா:
1999ஆம் ஆண்டு வெளியான ‘வாலி’ படத்தில், அஜித்-சிம்ரனை நடிக்க வைத்து கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இந்த படம் இவருக்கு பெரிய வெற்றியை தேடித்தர, அடுத்து 2000ஆம் ஆண்டில் விஜய்-ஜோதிகாவை வைத்து ‘குஷி’ படத்தை இயக்கினார். இந்த படமும் ஹிட் அடித்தது. இதையடுத்து தானே ஹீரோவாக நடித்தும் சில படங்களை இயக்கினார். நியூ, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்கள் பெரிதாக வசூலை பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த படமாக அமைந்தது. இதையடுத்து படங்களை இயக்குவதில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக்கொண்ட இவர், மீண்டும் 2015ஆம் ஆண்டு ‘இசை’ என்ற படத்தை இயக்கி, தயாரித்து அதற்கு இசையமைக்கவும் செய்தார். இப்படத்தின் க்ளைமேக்ஸை தவிர அனைத்தும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது.
திருமணம் செய்து கொள்ளவில்லை..
எஸ்.ஜே.சூர்யாவிற்கு தற்போது 55 வயதாகிறது. இந்த வயதிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத திரை கலைஞர்களின் லிஸ்டில் இவரும் உள்ளார். இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யா தனது காதல் தோல்வி குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.
தோல்வியில் முடிந்த எஸ்.ஜே.சூர்யாவின் காதல்..
எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் தனது காதல் கதையும், தான் இயக்கி நடிஹ்த்ட ‘அன்பே ஆருயிரே’ படத்தில் வரும் காதல் கதையும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்று கூறியுள்ளார். அதனால்தான் அந்த கதையை எடுத்ததாக தெரிவித்துள்ள அவர், தனது காதல் தோல்வி குறித்து அறிய வேண்டுமானால் அந்த படத்தை பார்க்கலாம் என தமாஷாக பேசினார். எஸ்.ஜே.சூர்யா இது குறித்து பேசுகையில் ஒரு நாள், டின்னருக்காக தனது காதலி ஏற்பாடு செய்ததாகவும் அப்போது ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததால் தனது காதலியிடம் அவசர வேலை என தெரிவித்து விட்டு கிளம்பி விட்டதாக தெரிவித்தார். வேலையை முடித்துவிட்டு இரவு 12 மணி அளவில் தனது காதலியின் வீட்டுக்கதவை தட்டியதாகவும் அப்போது அவர் ‘இது ஒன்றும் சத்திரம் இல்லை’ என்று கூறிவிட்டு கதவை மூடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்தின் போது மூடிய தனது இதயம், இப்போது வரை மூடப்பட்டே இருப்பதாக கூறியுள்ளார்.
வில்லன் ரோல்களில் கலக்கும் எஸ்.ஜே.சூர்யா..
நடிகர் எஸ்.ஜே.சூர்யா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்திருந்த சமயத்தில் அவருக்கு கைக்கொடுத்து தூக்கிய படம், இறைவி. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நெகடிவ் ஷேட் பொருந்திய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவர் சைக்கோ கொலைகாரனாக ‘ஸ்பைடர்’ படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும், இவரது கதாப்பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி உள்ளிட்ட அனைத்து படங்களிலும் வில்லனாக நடித்தார். இவரது நடிப்பில் அடுத்து இந்தியன் 2, கேம் சேஞ்சர், தனுஷின் 50வது படம், எல்.ஐ.சி உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours