ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக தெலுங்கு தேசம் தொண்டர்கள் போராட்டம்

Estimated read time 1 min read

ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக தெலுங்கு தேசம் தொண்டர்கள் போராட்டம்

27 டிச, 2023 – 13:02 IST

எழுத்தின் அளவு:


Telugu-Desam-activists-protest-against-Ram-Gopal-Varma

வில்லங்கமான படங்கள் எடுத்து, வில்லங்கமான கருத்துகளை கூறி தன்னை பரபரப்பிலேயே வைத்திருப்பவர் ராம்கோபால் வர்மா. என்.டி.ஆரின் வாழ்க்கையை மையமாக வைத்து பாலகிருஷ்ணா படம் எடுத்தபோது அதற்கு போட்டியாக ‘லஷ்மி என்.டி.ஆர்’ என்ற படம் எடுத்து சர்ச்சையை கிளப்பினார். அதில் என்.டி.ராமராவை பெண் பித்தராக சித்தரித்திருந்தார். ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘யாத்ரா’ என்ற படம் வெளியானது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இந்த படத்திற்கு போட்டியாக ‘வியூகம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராம் கோபால் வர்மா. இது தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையை மையமாக கொண்டது. ஜெகன் மோகன் ரெட்டியாக அஜ்மல் நடிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோரை காமெடியாக சித்தரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ராம் கோபால வர்மா அலுவலகம் முன்பாக கூடிய தெலுங்கு தேசம் கட்சியினர் ‘வியூகம்’ படத்தின் போஸ்டர்களை தீயிட்டுக் கொளுத்தினர். ராம் கோபால் வர்மாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் வந்து போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.

இதுகுறித்து ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில், “சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உங்களது நாய்கள் எனது அலுவலகத்தில் வந்து குரைத்துக் கொண்டிருந்தது; காவலர்கள் வரவே ஓடிவிட்டார்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் வியூகம் படத்தை தடை செய்ய கோரி சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ”வியூகம் படத்தில் சந்திரபாபு நாயுடுவை தவறாக காட்டி உள்ளனர். அவரது கவுரவத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை எடுத்து உள்ளனர். இதனை டிரைலரில் பார்க்க முடிகிறது. டிரைலரில் இருப்பது போலவே படம் முழுவதும் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே வியூகம் படத்தை தடை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours