Vijayakanth: "அந்தப் பாட்டைப் பாடினப்போ… கேப்டனுக்கு கண்ணீர் கொட்டுச்சு!" – ஆர்.கே செல்வமணி

Estimated read time 1 min read

‘கேப்டன்’…. விஜயகாந்துக்கு இப்போதும் ‘கேப்டன்’ என்ற அடைமொழியை கொடுத்துக்கொண்டிருக்கும் படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்த் திரை வாழ்க்கையின் நூறாவது மெகாஹிட் படமான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை இயக்கி வெள்ளி விழா கொண்டாட வைத்தவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.

விஜயகாந்த் கரியரில் வெற்றி இயக்குநரான ஆர்.கே செல்வமணி ஆனந்த விகடன் ‘உறவின் மொழி’ தொடரில் விஜயகாந்த் குறித்து பகிந்துகொண்ட நினைவுகளோடு, தற்போது அவரது மறைவுக்கு பெப்சி சார்பாக உருக்கமுடன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையை இணைத்துள்ளோம்.

விஜயகாந்த்துடன் ஆர்.கே செல்வமணி

“விஜயகாந்த் சாரைப் பார்த்து அடிக்கடி நலம் விசாரிப்பது வழக்கம். ஆறு மாசத்துக்கு முன்னாடி, அவரை வெச்சு படம் இயக்கிய விக்ரமன், ஆர்.வி உதயகுமாருடன் நானும் போய் பார்த்தேன். அப்போது உடல்நிலை நல்லாதான் இருந்துச்சு. அவரைப் பார்த்ததும் ஆர்.வி உதயகுமார் ‘வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே’ பாட்டைப் பாடினார். உடனே, விஜயகாந்த் சார் கண்ணுல இருந்து அப்படியே தண்ணி கொட்டுச்சு. அவரோட நிலமையைப் பார்த்து மூணு பேருமே அழுதுட்டோம்.

பெப்ஸி சார்பாக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை

தமிழ் சினிமா துறையில கேப்டன் ஒரு சிங்கம். அவரை இயக்கிய நாங்க இன்னும் பர்சனலா பார்த்திருக்கோம். பர்சனலா அவரோட துணிச்சல், உதவும் உள்ளம் எல்லாமே தெரியும். சிங்கம்தான் அவர். நல்ல மனம் படைச்ச, அவருக்குப்போய் இந்த நிலைமையான்னு கடவுள் மேலேயே எனக்கு கோபமும் வருத்தமும் உண்டு. ஏன்னா, உலகத்தின் மிகச்சிறந்த மனிதர் அவர். இவ்வளவு துன்பத்தைக் கொடுக்கக்கூடாது” என்று வேதனையுடன் பகிர்ந்துகொண்டார். தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் (பெப்சி) சார்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“திரைப்படத் துறையினர் மட்டுமல்லாது உலகத் தமிழர்களாலும் நேசிக்கப்படுப்படும் பாராட்டப்படும் திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு எங்களுக்கு பெரும் துன்பத்தையும் பேரதிர்ச்சியையும் கொடுக்கிறது. சினிமாவின் அனைத்து பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும், உதவி இயக்குநர்களுக்கும், நாளைய இயக்குநர்களுக்கும், அவர்கள் நல்ல நிலையை அடையும்வரை தாயாக இருந்து பசித்துயரை போக்கிய மாமனிதர் விஜயகாந்த். அவரின் இழப்பு திரைத்துறையினருக்கு பேரிழப்பு.

இரங்கல் அறிக்கை

அவரது மறைவையொட்டி நாளை திரைப்படத்துறையின் அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைக்கிறோம். நாளை கமலா தியேட்டரில் நடைபெறுவதாக இருந்த ‘தொழிலாளர்கள் ஒருமைப்பாடு தினம்’ ரத்து செய்யப்படுவதையும் தெரிவித்துக்கொள்கிறோம். கேப்டன் அவர்களின் மறைவால் பெருந்துயர் அடைந்துள்ள தமிழக மக்களுக்கும், மகன்கள் சண்முகப் பாண்டியன், விஜய பிரபாகரனுக்கும், மனையார் பிரேமலதா அவர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours