இந்த 2023 ஆண்டை பொருத்தவரை, தமிழில் மட்டுமன்றி, இந்திய அளவில பல நல்ல படங்கள் திரைக்கு வந்தன. ஆனால், தமிழில் ரசிகர்களை பெரிதும் எதிர்பார்க்க வைத்த சில படங்கள் ரிலீஸிற்கு பிறகு அவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அப்படி ரசிகர்களை திரையரங்கிற்கு வர வழைத்து ஏமாற்றிய படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போமா?
மைக்கேல்:
ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி வெளியாகியிருந்த படம், மைக்கேல். இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், அனுசுயா, வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் ப்ரமோஷன் செய்தனர். படத்தின் டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. ஆனால் படமோ, நெகடிவ் விமர்சனங்களை பெற்று ரசிகர்களை ஈர்க்க தவறியது.
பிச்சைக்காரன் 2:
விஜய் ஆண்டனியின் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம், பிச்சைக்காரன். இந்த படத்தின் கதை தொடர்ச்சியாக இல்லாமல், இன்னொரு கதையை வைத்து பிச்சைக்காரன் 2 படம் எடுக்கப்பட்டது. இதை விஜய் ஆண்டனியே நடித்து இயக்கினார். இது, ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம், எதிர்பார்த்த அளவு இல்லை என்ற விமர்சனத்தை பெற்றது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் சரியான கலெக்ஷனை பெற இந்த படம் தவறியது.
மேலும் படிக்க | 2023ஆம் ஆண்டின் டாப் 10 கோலிவுட் இயக்குநர்கள்! டாப்பில் இருப்பது யார் தெரியுமா?
இறைவன்:
‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி-நயன்தாரா இணைந்து நடித்த படம் இறைவன். இந்த படம், கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ஐ.அஹமத் இயக்கிய இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததை தொடர்ந்து, படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் படத்தில் சரியான லாஜிக் இல்லை என்ற விமர்சனத்தை ரசிகர்களிடம் இருந்து பெற்றது.
சந்திரமுகி 2:
ரஜினிகாந்த் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வெளியானது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், மகிமா நம்பியார், லக்ஷ்மி மேனன் உள்ளிட்டோர் படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். படம், முதல் பாகம் அளவிற்கு இல்லை என்ற விமர்சனத்தையும், கதை பெரிதாக இல்லை என்ற விமர்சனத்தையும் பெற்றது.
ஜப்பான்:
கார்த்தி நடிப்பில் உருவான ஜப்பான் படம், உண்மையான திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ராஜூ முருகன் இயக்கியிருந்த இந்த படத்தில் அனு இமானுவேல், பவா செல்லதுரை, வைகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் கார்த்தியின் 25வது படமாகும். இதனால், இப்படத்திற்கான ப்ரமோஷன் பெரிய அளவில் நடைப்பெற்றது. ஆனாலும் படம் என்னவோ ரசிகர்கள் மத்தியில் பயங்கர நெகடிவான விமர்சனத்தைதான் பெற்றது. பாக்ஸ் ஆபிசிலும் இப்படம் அந்தளவிற்கு வசூலை பெறவில்லை. ஒரு சிலர், இந்த வருடம் வந்ததிலேயே இந்த படம்தான் மிகவும் மோசம் என தெரிவித்திருந்தனர்.
மேலும் படிக்க | 2023ஆம் ஆண்டின் சிறந்த தென்னிந்திய வெப் தொடர்கள்! லிஸ்டில் இத்தனை தமிழ் சீரிஸா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours