Nilavukku Emel Enadi Kobam: தனுஷின் இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகும் ‘DD3’ படத்திற்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24 அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நீண்ட நாட்களாக பேச்சு வார்த்தையில் இருந்த இந்த படத்தை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் தனுஷ், சினிமா துறையில் பல வேலைகளை செய்து வருகிறார். படம் தயாரிப்பு, பாடல்கள் எழுதுவது, இயக்கம் என பல்வேறு துறைகளில் தனது காலடி தடத்தை பதித்து வருகிறார். ‘நிலவுக்கு ஏமல் ஏனாடி கோபம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் காதல்-காமெடி கலந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். முன்னதாக 2017ம் ஆண்டு இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் இந்த படம் அடுத்தகட்டத்திற்கு செல்லவில்லை.
THROWBACK.#NilavukkuEnmelEnnadiKobam pic.twitter.com/oTVsHjz9n1
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 24, 2023
மேலும் படிக்க | மவுசு குறைந்த மணிரத்னம்.. இவர்களே 2023 ஆண்டின் டாப் 5 தமிழ் இயக்குனர்கள்
இதற்கிடையில், தனுஷ் இயக்கி நடித்திருக்கும் அவரது இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படமும் மற்றும் அவரது நடிப்பில் வெளியாகும் 50வது படமுமான ‘D50’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15 அன்று முடிவடைந்தது. “#D50 #DD2wrapped. ஒட்டுமொத்த குழுவினருக்கும் நடிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மேலும், எனக்கு ஆதரவளித்த கலாநிதி மாறன் சார் மற்றும் சன் பிக்சர்ஸ் ஆகியோருக்கு மிக்க நன்றி” என்று X தளத்தில் பதிவிட்டு இருந்தார் தனுஷ். தனுஷ் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பா பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் அவருக்கு சிறந்த இயக்குனருக்கான முதல் ஃபிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது.
#D50 #DD2wrapped. My sincere thanks to the entire crew and cast. Also a big thanks to Kalanithi Maran sir and Sun Pictures for supporting my vision.
— Dhanush (@dhanushkraja) December 14, 2023
தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2024 ஜனவரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடித்துள்ள இந்த படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படம் ஒரு பீரியட் ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. படத்தின் இரண்டாவது பாடலான உன் ஒலியிலே சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
Captain Miller second single https://t.co/Su7SRHqjRT pic.twitter.com/wsTjXsERbH
— Dhanush (@dhanushkraja) December 23, 2023
மேலும் படிக்க | சலார் படத்தின் பட்ஜெட் 400 கோடி-அதில் இயக்குநருக்கு மட்டும் ‘இத்தனை’ கோடி சம்பளம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours