தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வைகுண்டம் சௌந்தரபாண்டியிடம் என் பையன் தேர்தலில் நின்று தர்மகத்தாவாக ஜெயிப்பான் என்று சவால் விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வீட்டிற்கு வந்த வைகுண்டம் உன் அம்மாவை பத்தி தப்பா பேசுன அவன் கர்வத்தை அடக்கணும், நீ தர்மகத்தாவாக ஜெயித்து காட்டணும், பரணிக்கு நல்ல புருஷனாவும் வாழ்ந்து காட்டணும் என்று சொல்ல ஷண்முகம் உங்க ஆசையை நான் நிறைவேற்றுவேன் என்று வாக்கு கொடுக்கிறான்.
அதன் பிறகு கிளினிக்கில் இருந்து வீட்டிற்கு வரும் பரணி இசக்கியிடம் இன்னைக்கு நான் சமைக்கிறேன் என்று சொல்லி விட்டு சமையலுக்கான ஏற்பாடுகளை செய்கிறாள், ஷண்முகத்திற்கு போன் போட்டு இன்னைக்கு நான் தான் சமைக்க போறேன், எல்லாருக்கும் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வந்துடுங்க என்று அன்போடு பேச ஷண்முகம் சந்தோஷப்படுகிறான்.
மேலும் படிக்க | 2023ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்!
பரணி ஒரு 20 முட்டைக்கு வேக வைக்க தங்கைகள் எல்லாரும் எதுக்கு இவ்வளவு முட்டை என யோசிக்கின்றனர். பிறகு ஷண்முகம் வந்ததும் எல்லாரும் சாப்பிட உட்கார பரணி சண்முகத்தை எழுப்பி இந்த இலையில் உட்காருங்க என மாற்றி உட்கார வைக்கிறாள். எல்லாருக்கும் அரை முட்டை மட்டுமே வைக்கப்பட்டு இருக்க ஷண்முக சாப்பாட்டுக்கள் 10 முட்டை மறைத்து வைக்கப்பட்டு இருக்க அதை பார்த்து எல்லாரும் பரணியையும் ஷண்முகத்தையும் கலாய்க்கின்றனர்.
மறுபக்கம் தூங்கி கொண்டிருக்கும் சௌந்தரபாண்டி முத்துபாண்டியே தன்னை கைது செய்வது போல கனவு கண்டு அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | Salaar Review: சலார் முதல் விமர்சனம்.. பாக்ஸ் ஆபிஸில் கெத்தா? எப்படி இருக்கு படம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours