Legend Saravanan Next Movie Announcement With Rs Durai Senthilkumar

Estimated read time 1 min read

‘லெஜண்ட்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான தொழிலதிபர், லெஜண்ட் சரவணன். இவர், தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவர். தனது துணிக்கடையின் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு திடீரென படங்களில் நடிக்க ஆசை வந்தது. விளம்பர படங்களிலேயே ஹன்சிகா, தமன்னாவுடன் ஆட்டம் போட்ட இவர் திரைப்படத்திலும் சில முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட ஆசைப்பட்டார் போலும். இதையடுத்து, தனது ஆசையை செயல்முறையாகவும் மாற்றினார். தற்போது இவரை வைத்து பிரபல இயக்குநர் ஒருவர் படம் எடுக்க உள்ளாராம். 

லெஜண்ட் சரவணன்..

சரவணா செல்வரத்தினம் கடையின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன். இவரது உண்மையான படம், சரவண அருள். இவர்நடித்திருந்த லெஜண்ட் படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. இவர் விளம்பர படங்களில் நடிப்பதை பார்த்து ரசிகர்கள் எப்படி ரசித்தார்களோ, படத்தையும் அதே போல சிரித்து ரசித்தனர். இந்த படத்தில் இவருக்கு இரண்டு கதாநாயகிகள். பாடல்களும் கேட்கும் ரகத்தில் இருந்தது. இந்த படத்தில் இவரது நடிப்பை தவிர வேறு எதையும் பெரிய குறையாக யாரும் சொல்லவில்லை. 

சென்னையில் பிறந்து வளர்ந்த சரவணனுக்கு தற்போது 53 வயதாகிறது. இவர், நடிக்க வருவதற்கு முன்பு மக்கள் நலனுக்காக சில சேவைகளில் ஈடுபட்டு வந்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார். லெஜண்ட்  திரைப்படம், இவரை தமிழ் ரசிகர்களை தாண்டி தெலுங்கு திரையுலகம் வரை அறிய வைத்தது. இவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | 2023ம் ஆண்டில் அதிக வசூல் செய்த டாப் படங்கள்.. இதோ முழு லிஸ்ட்

அடுத்த படம்..

லெஜண்ட் சரவணன் படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து அடிக்கடி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தலைகாட்டி வந்தார். இதையடுத்து, அவரிடம் அடுத்த படத்தின் அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், தற்போதைக்கு கதைகளை கேட்டு வருவதாகவும், நல்ல கதை அமைந்தால் விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் கூறினார். இந்த நிலையில், அவர் அடுத்து நடிக்கும் படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. 

Legend

தனுஷ்-சிவகார்த்திகேயனை இயக்கியவர்..

லெஜண்ட் சரவணன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை, துரை செந்தில் குமார் இயக்க இருக்கிறாராம். இவர், தனுஷை வைத்து கொடி, பட்டாஸ் போன்ற படங்களை எடுத்தார். சிவகார்த்திகேயன் நடித்திருந்த காக்கி சட்டை படத்தையும் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த எதிர்நீச்சல் படத்தையும் இயக்கியவர் இவர்தான். 

இவர், சரவணனை வைத்து இயக்க இருக்கும் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை எதையும் உறுதியாக கூற இயலாது. 

மேலும் படிக்க | Salaar Review in Tamil :பிரபாஸுக்கு அடுத்த ப்ளாக் பஸ்டர் உறுதி! சலார் படம் எப்படி? விமர்சனம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours