குறிப்பாக நீதிமன்றத்தில் உடைந்து பேசும் அந்தக் காட்சியில் அனைவரையும் நெகிழச் செய்துவிடுகிறது அவரது நடிப்பு. அவர்தான் படத்தின் முக்கிய ப்ளஸ். படத்தில் ஷாருக்கை விடவும் அதிக காட்சிகளில் வருவது டாப்ஸிதான். அவர் நிறைவான நடிப்பைக் கொடுத்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் அவ்வளவு அழுத்தமாக எழுதப்படாதது ஏமாற்றம். லண்டன் சென்றே ஆக வேண்டும் என்ற அவரது பிடிவாதத்துடன் நம்மால் தொடர்புப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. சிறப்புத் தோற்றத்தில் சில காட்சிகளே வந்தாலும் விக்கி கௌஷல் கவர்கிறார். அவரது கதாபாத்திரத்திலிருந்த அழுத்தம் கூட டாப்ஸி மற்றும் நண்பர்களின் கதாபாத்திரங்களில் இல்லை என்பது மைனஸ்.
முதல் பாதியில் பெரும்பாலும் காமெடியை நம்பியே பயணிக்கிறது படம். போமன் இரானியின் இங்கிலிஷ் டுடோரியலில் இவர்கள் செய்யும் அலப்பறைகள் ட்ரேட்மார்க் ராஜு ஹிரானி காமெடி ட்ரீட். ஆனால், இப்படி ஜாலியாகவே பயணிக்கும் படம் இரண்டாம் பாதியில் மொத்தமாக வேறு டிராக்குக்கு மாறிவிடுகிறது. அப்படியான மாற்றத்திற்குப் பார்வையாளர்களாக நாமும் தயாராகவே இல்லை.
அது மட்டுமின்றி முதல் பாதியின் காமெடி ட்ரீட்மென்ட் மொத்தமாக அவர்களின் பிரச்னையிலிருக்கும் அழுத்தத்தையும் நமக்குக் கடத்தாமல் போய்விடுகிறது. அதனாலேயே சட்டவிரோதமாக இவர்கள் செய்யும் ‘டங்கி’ பயணத்தில் நமக்கு எந்த ஒரு பிடிப்புமே இல்லை. அந்த செக்மென்ட்டும் படு சுமாராகவே எழுதப்பட்டிருப்பதால் மொத்தமாகவே சுவாரஸ்யமற்ற காட்சிகளாக அவை கடந்து போகின்றன. இரண்டாம் பாதியில் எமோஷனலாக சில காட்சிகள் நம் மனதைத் தொட்டாலும் செயற்கையான மேக்கிங் நம்மைச் சோதிக்கவே செய்கிறது.
+ There are no comments
Add yours