ரவீனாவைப் பார்த்து அவர் ‘அவ்வளவு கோபம் வருது என்ன விளையாட்டு விளையாடுற’ என்று திட்டுகிறார். அதோடு மணியையும் எச்சரிக்கை செய்கிறார். இது ஒருபுறம் இருக்க ரவீனாவிடம் அவர் ரெட் போன்ற சில Code Words-ம் பேசுகிறார்.
இதனால் கோபமடைந்த பிக் பாஸ் ‘வெளியுலக விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டதாலும், Code Words-யை பயன்படுத்தியதாலும், இந்த பிக் பாஸ் வீட்டில் உங்கள் நேரம் இத்துடன் முடிந்துவிட்டது’ என்று கூறிவிட்டார். அதிர்ச்சி அடைந்த ரவீனா அழுகிறார். இந்த புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய எபிசோடில்தான் என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியும்.
+ There are no comments
Add yours