`பாபாசாகேபின் காதல் கடிதம்’ நூலும் `வேட்டுவம்’ படமும் – இளையராஜா – பா.இரஞ்சித் சந்திப்பின் பின்னணி! | Details regarding Director Pa. Ranjith meeting Ilaiyaraaja

Estimated read time 1 min read

இந்நிலையில் இன்று இளையராஜாவைச் சந்தித்திருக்கிறார் பா.இரஞ்சித். இளையராஜாவை அவர் நேரில் சந்தித்தது இதுதான் முதல் முறை என்பதால், இசைஞானிக்கு நினைவுப் பரிசுகளும் கொண்டு சென்றார். ‘பாபாசாகேபின் காதல் கடிதம்’ என்ற புத்தகத்தையும் நீலம் பதிப்பகத்தின் வெளியீடு ஒன்றையும் ராஜாவுக்கு வழங்கினார். பின்னர், இருவரும் நீண்ட நேரம் உரையாடினார்கள். அவர்களது உரையாடல் அரைமணி நேரம் நீடித்தது என்கிறார்கள்.

ராஜாவின் அலுவலகத்தில் பா.இரஞ்சித்

ராஜாவின் அலுவலகத்தில் பா.இரஞ்சித்

இரஞ்சித் தற்போது இயக்கியிருக்கும் ‘தங்கலான்’ படம் அடுத்தாண்டு ஜனவரி 26ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து ‘வேட்டுவம்’ என்ற படத்தை இயக்குகிறார் இரஞ்சித். சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸில் நடந்த 75வது கான் (Cannes) திரைப்பட விழாவில் ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் ரஞ்சித். இந்தப் படம் மதுரை பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதை என்ற பேச்சு இருக்கிறது.

பாலிவுட்டைச் சேர்ந்த அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளதாக அப்போது அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்திற்காகத்தான் இளைராஜாவை கமிட் செய்ய இரஞ்சித் அவரைச் சந்தித்திருக்கிறார் என்ற பேச்சும் இருக்கிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours