75 நாளைக் கடந்த ‘இறுகப்பற்று’
20 டிச, 2023 – 12:49 IST

ஒரு காலத்தில் திரைப்படங்கள் குறைந்த தியேட்டர்களில் வெளியாகி அதிக நாட்கள் ஓடின. இந்தக் காலத்தில் அதிகத் தியேட்டர்களில் வெளியாகி குறைந்த நாட்களே ஓடுகின்றன.
நான்கே வாரங்களில் புதிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவதால் 25 நாட்களைக் கடப்பதும், 50 நாட்களைக் கடப்பதும் அபூர்வமாகிவிட்டது. அப்படியே கடந்தாலும் அவை ஒரு சில காட்சிகள் மட்டுமே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அப்படி ஓடும் படங்களும் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டில் ஒரு சில படங்கள் மட்டுமே சில காட்சிகள் ஓடி, 50 நாட்களைக் கடந்துள்ளன. அந்த வரிசையில் ‘இறுகப்பற்று’ படம் 75வது நாளைக் கடந்துள்ளது. சென்னையில் உள்ள பிவிஆர் தியேட்டரில் ஒரே ஒரு காட்சியாக 75வது நாளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற படம் 75 நாளைக் கடந்திருப்பதற்கு படக்குழுவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
+ There are no comments
Add yours