ஒவ்வொரு நாளும் உன்னை இழந்து வாடுகிறேன் : மகளை நினைத்து உருகிய சித்ரா
19 டிச, 2023 – 13:18 IST

‛சின்னக்குயில்’ என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் பிரபல பின்னணி பாடகி கேஎஸ் சித்ரா. 40 ஆண்டுகளாக தென்னிந்திய மற்றும் இந்திய மொழிகளில் பாடி வருகிறார். விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்த சித்ராவிற்கு 2002ல் நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தார். கடந்த 2011ல் துபாயில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்ததில் நந்தனா இறந்தார். அவர் இறந்து 12 ஆண்டுகள் ஆன பின்னும் மகளின் பிரிவை அவரால் மறக்க முடியவில்லை.
நந்தனாவிற்கு நேற்று பிறந்தநாள். இதுதொடர்பாக நந்தனாவின் போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து, ‛‛நீ என் இதயத்தை துளைத்து சென்றுவிட்டாய். அதை என்னால் என்றும் நிரப்பவே முடியாது. நீ என்னை விட்டு போன பின் ஒவ்வொரு நாளும் நான் உன்னை அதிகமாக இழந்து வாடுகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா” எனப் பதிவிட்டுள்ளார் சித்ரா.
+ There are no comments
Add yours