Bigg Boss 7: பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் தினேஷின் பெற்றோர்; ரச்சிதா குறித்துப் பேசுவார்களா?

Estimated read time 1 min read

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 கடந்த அக்டோபர் 2 முதல் விஜய் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. சில வாரங்கள் கழித்து முதல் வைல்டு கார்டு என்ட்ரியாக ஒரே நேரத்தில் ஐந்து போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் போனது நினைவிருக்கலாம்.

தினேஷ், அர்ச்சனா, பிராவோ, அன்ன பாரதி, கானா பாலா ஆகிய அந்த ஐந்து பேரில் இப்போது தினேஷும் அர்ச்சனாவும் நிகழ்ச்சியில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இறுதிப் பட்டியலில் சேர்ந்து விட்டார்களெனச் சொல்லலாம். தொடர்ந்து இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பழைய போட்டியாளர்கள் மூன்று பேர் நிகழ்ச்சிக்குள் சென்றார்கள். அவர்களில் அனன்யா மீண்டும் எலிமினேட் ஆகி வெளியில் வந்துவிட்டார். மேலும் கடந்த வார எவிக்‌ஷனில் கூல் சுரேஷ் வெளியேற எஞ்சியுள்ள போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாட்டைத் தொடர்ந்து வருகின்றனர். தினம் தினம் விதவிதமான டாஸ்குகளை இவர்களுக்கு வைத்து நிகழ்ச்சிக்கு ரேட்டிங் குறைந்து விடாதபடி பார்க்கிற வேலையை பிக் பாஸும் ஒருபுறம் செய்து வருகிறார்.

இன்றைய தேதிக்கு மாயா, பூர்ணிமா, விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் வலுவான போட்டியாளர்களாகத் தெரிவதாக ஒரு கருத்து பிக் பாஸ் ரசிகர்களிடம் இருந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் எபிசோடு நிகழ இருக்கிறதாம்.

ரச்சிதா

இதற்காக போட்டியாளர்களின் குடும்பத்தினர் நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டிருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்காக தினேஷின் அப்பாவும் அம்மாவும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கிளம்பி வந்திருக்கிறார்கள். இன்று அவர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார்களாம். மற்ற போட்டியாளர்களைவிட தினேஷின் ஃபேமிலி மெம்பர் விசிட் பிக் பாஸ் ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப் படுகிறது. காரணம் நிகழ்ச்சிக்குள் தன் மனைவி ரச்சிதா குறித்து தினேஷ் பேசியதுதான். தினேஷைப் பார்க்க ரச்சிதா வருவாரா என தினேஷ் ரச்சிதா ரசிகர்கள் ஒருபுறம் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் ரச்சிதா தரப்பில் அதற்குச் சாதகமான எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

இந்த ஃபேமிலி விசிட் எபிசோடு இன்றோ நாளையோ ஒளிபரப்பாகலாம்.  

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours