ஜீ தமிழ் `சரிகமப லிட்டில் சாம்பியன் சீசன் 3″ நிறைவடைந்திருக்கிறது. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டைட்டில் பட்டத்தை வென்றிருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த அசானி. இரண்டாவது இடத்தை சென்னையைச் சேர்ந்த ருத்ரேஷூம், மூன்றாவது இடத்தை சஞ்சனாவும், நான்காவது இடத்தை ரிக்ஷிதாவும் வென்றிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியின்போது போட்டியாளராகக் கலந்துகொண்ட சிறப்புக் குழந்தையான பிரியன் மேடையில் நின்று பேசியது அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது. பலரும் சமூகவலைதள பக்கங்களின் வாயிலாக பிரியனுகக்கு தங்களின் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
+ There are no comments
Add yours