D50: தனுஷுடன் மீண்டும் இணையும் `ரவுடி பேபி' பிரபுதேவா; ஜெட் வேகப் படப்பிடிப்பும் ரிலீஸ் பிளானும்!

Estimated read time 1 min read

தனுஷின் `கேப்டன் மில்லர்’ பொங்கல் விருந்தாகத் திரைக்கு வருகிறது. இதற்கிடையே அவர் இயக்கி வந்த `D50′ படப்பிடிப்பு, நிறைவு பெற்றிருக்கிறது. ராஜ்கிரண் நடித்த `பா.பாண்டி’ படத்தை அடுத்து, இப்போது தனது 50வது படத்தை தனுஷே இயக்கியிருக்கிறார்.

கேப்டன் மில்லர் டீம்

‘திருச்சிற்றம்பலம்’ வெற்றி காரணமாக அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கூட்டணியில் மீண்டும் இணைந்தார் தனுஷ். இது அவரது 50வது படம் என்பதால், அதனை தனுஷே இயக்க முடிவெடுத்தார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷாரா எனப் பலரும் நடிக்கின்றனர். இந்தக் கதை வடசென்னையின் கேங்ஸ்டர் கதை இது என்பதால், வடசென்னை ஏரியாவில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டனர். தனுஷ் நினைத்தது போல், கதைக்கான லொக்கேஷன் அமையாமல் போனது.

எனவே ஈ.சி.ஆரில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சூழ்ந்த பெரிய கிராமம் ஒன்றையே செட் போட்டுப் படப்பிடிப்பை ஆரம்பித்தனர். பெரும்பாலும் இரவு நேரப் படப்பிடிப்புகள்தான். மொத்த படப்பிடிப்பையும் அங்கேதான் முடித்துள்ளனர். ‘திருச்சிற்றம்பலம்’ வெற்றிக்கூட்டணியான ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், ‘D50’க்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதன் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டே அவர் ‘விடா முயற்சி’யின் படப்பிடிப்புக்குக் கிளம்பிப் போனார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். பாடல்களும் ஏற்கெனவே படமாக்கப்பட்டு விட்டன. இந்தப் படத்திற்காக மொட்டை அடித்ததுடன், வித்தியாசமான தோற்றத்தில் தனுஷ் நடித்துள்ளார். படத்தின் டைட்டில் ‘ராயன்’ ஆக இருக்கலாம் என்கிறார்கள்.

டி-50

கேங்க்ஸ்டர் கதை என்றாலும், இந்தக் கதையில் அண்ணன் – தங்கைக்கான எமோஷனலான விஷயங்கள் நிறைய உள்ளனவாம். டைட்டில் அறிவித்த பின், படத்தின் புரொமோ வீடியோ ஒன்றும் வெளியாகவிருக்கிறது என்கிறார்கள். பிரபுதேவா நடன அமைப்பில் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்று உள்ளனர் என்றும் சொல்கிறார்கள்.

‘மாரி’ ரவுடி பேபி… பாடலுக்குப் பின் பிரபுதேவாவுடன் இணைந்திருக்கிறார் தனுஷ். இரண்டு வாரத்திற்கு முன்னரே மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டது என்றும் தகவல். இன்னொரு விஷயம், ‘D50’க்கு முன்னர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ பொங்கலுக்கு வெளியாகிறது. அந்தப் படம் வெளியான பின்னரே, ‘D50’யின் அடுத்தடுத்த அப்டேட்கள் அதிரடியாக வெளிவரும் என்றும் சொல்கிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours