அஜித்தின் விடாமுயற்சி – சார்ட்டிலைட்- டிஜிட்டல் ரூ.250 கோடிக்கு விற்பனை!
17 டிச, 2023 – 10:44 IST
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் அங்குதான் நடைபெற்று வருகிறது.
அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு உணவகத்தில் அஜித் குமார், அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலரும் டின்னர் சாப்பிட்ட புகைப்படம் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, 250 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் 250 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் இந்த வியாபாரம் காரணமாக படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே 75 சதவீத பட்ஜெட் தொகையை எடுத்து விட்டது தயாரிப்பு நிறுவனம். மேலும், இந்த விடாமுயற்சி படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளது.
+ There are no comments
Add yours