தயாரிப்பாளரை மாற்றிய விக்னேஷ் சிவன், பிரதீப் கூட்டணி
15 டிச, 2023 – 15:54 IST
‘லவ்டுடே’ படத்திற்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. அதற்காக தனி அலுவலகம் போடப்பட்டு தயாரிப்புப் பணிகளும் ஆரம்பமானது. கடந்த மாதம் நடைபெற்ற கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் கூட விக்னேஷ் சிவன் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பிலிருந்து கமல்ஹாசன் விலகிவிட்டார். அப்படத்தை ‘லியோ’ படத் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கிறார். இதற்கான பூஜையும் நடைபெற்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுடன் விக்னேஷ் சிவனுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே தயாரிப்பாளர் மாறக் காரணம் என்கிறார்கள். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்திற்காக நயன்தாராவிடம் பேசி அவர் நடிக்க மறுத்ததாகவும் ஒரு தகவல் உலவி வருகிறது.
விக்னேஷ் சிவன், அனிருத், பிரதீப், எஸ்ஜே சூர்யா, கிரித்தி ஷெட்டி என புதிய கூட்டணியில் உருவாக உள்ள இப்படம் மீது இப்போதே எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
+ There are no comments
Add yours