சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது
16 டிச, 2023 – 11:57 IST
இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு தமிழக அரசுடன் இணைந்து நடத்தும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. இந்த விழா வருகிற 21ம் தேதி வரை நடக்க இருக்கிறது. 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்படுகிறது. ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் 50 லட்சத்தில் இருந்து 1 கோடி வரை நிதி வழங்கப்படும். இந்த ஆண்டு 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த விழாவில் இண்டோ சினி அப்ரிசேஷன் தலைவர் சிவன் கண்ணன் தலைமையில், நடிகை பார்வதி நாயர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து விழாவை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் இ.தங்கராஜ், இயக்குநர்கள் மோகன் ராஜா, யூகி சேது உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்த தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் வெள்ள நிவாரண பணிகள் காரணமாக கலந்து கொள்ளவில்லை.
+ There are no comments
Add yours