சிவகார்த்திகேயனின் புதிய லுக் எந்த படத்திற்கு?
13 டிச, 2023 – 13:29 IST
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயன் மீசை, தாடி இல்லாமல் மிக இளமையான தோற்றத்தில் உள்ள போட்டோ வைரலாகி வருகிறது. இப்போது கிடைத்த தகவலின் படி, இந்த புதிய லுக் சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் ராணுவ வீரர் பயிற்சி காலத்தில் உள்ள தோற்றம். இப்போது இதற்கான படப்பிடிப்பு தான் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours