`தென்றல்” தொடரின் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டவர் ஸ்ருதி ராஜ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `தாலாட்டு’ தொடரில் சமீபத்தில் நடித்திருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னத்திரை, வெள்ளித்திரை என கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சஞ்சீவ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `கிழக்கு வாசல்’ தொடர் முதலில் நடிப்பதற்கு அவர்தான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். பின்னர் சில காரணங்களால் அவர் வெளியேறியதாகக் கூறப்பட்டது. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `வானத்தைப் போல’ தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரும், ஸ்ருதியும் இணைந்து புதுத்தொடர் ஒன்றில் நடிக்கவிருப்பதாகவும், அந்தத் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
+ There are no comments
Add yours