ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் இந்தியத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படம், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதுமையான ஆக்சன் உலகைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. முதல் சிங்கிள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே, ரசிகர்கள் சலாரின் இசை உலகத்தை தரிசிக்க ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது, தயாரிப்பு நிறுவனம் சலார் படத்தின் முதல் சிங்கிள் சூரியன் குடைய நீட்டி பாடலை வெளியிட்டுள்ளனர்.
These lines from Hindi Version “Hai Akela, Fauj Jaia.. Waar Na Chooke”
Perfectly describes One Man ArPrabhas || #Salaar pic.twitter.com/m4Go0If2Ey
— ActorPrabhas (@goutham4098) December 14, 2023
மேலும் படிக்க | இந்த படமும் லிஸ்ட் ல இருக்கா? இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் எது?
மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும் இப்படத்தின் உணர்ச்சிகரமான பக்கத்தை பற்றிய ஒரு அறிமுகத்தை இந்த சிங்கிள் பாடல் நமக்கு வழங்குகிறது. மேலும் இது ஒருவரின் முழுபலமாகவும் அதே நேரம் பலவீனமாகவும் இருக்கும் இரண்டு சிறந்த நண்பர்களின் உணர்வுகளையும் எடுத்துக்காட்டுகிறது. இப்பாடல் படத்தின் உணர்வுப்பூர்வமான அம்சத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது, இப்படம் வெறும் ஆக்ஷன் திரைப்படமாக மட்டுமல்லாமல், இரண்டு சிறந்த நண்பர்களின் பின்னணியில் பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் மிகவும் உணர்ச்சிகரமான திரைப்படமாக இருக்குமென உறுதியளிக்கிறது.
8 Days To Go #Salaar#Prabhas #PrashanthNeel #SalaarCeaseFire pic.twitter.com/5BPD2dBCrk
— Adheera (@adheeraeditz) December 14, 2023
2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படத்திற்கு சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் பல இரத்தக்களரியான ஆக்சன் காட்சிகள், வன்முறை மிகுந்த அதிரடி காட்சிகள் நிறைய உள்ளது. ‘ஏ’ சர்டிபிகேட் எனும் முத்திரையே படத்தின் ஆக்சன் அளவை பிரதிபலிக்கிறது. ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசை அமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 22, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இசையமைப்பாளர்: ரவி பஸ்ரூர்
பாடியவர்: ஐரா உடுப்பி
பாடலாசிரியர்: மதுரகவி
பாடல் லிங்க் – https://youtu.be/UmycVwrn0Ng
மேலும் படிக்க | ZEE5 டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours