பிக்பாஸ் சீசன் 7 போட்டி, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த போட்டியில் எதிர்பாராத வகையில் பல சம்பவங்கள் நடந்தன. அந்த வகையில், இந்த வாரமும் ஒரு சிறப்பான சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இன்று, ஒரு போட்டியாளர் பிக்பாஸ் போட்டியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் 7:
தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆங்கிலத்தில் நடைப்பெற்று வரும் பிக்பாஸ் பாேட்டியைத்தான் இவர்கள் இந்தி உள்ளிட்ட வேறு சில மொழிகளில் நடத்தி வருகின்றனர். தமிழில், இப்போட்டி 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பித்ததில் இருந்து தற்போது நடைப்பெற்று வரும் 7வது சீசன் வரை, இப்போட்டி பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு, இந்த சீசனில் பிக்பாஸ் பாேட்டி பல புது கெடுபிடிகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஆரம்பித்தது. பிக்பாஸ் வீடு-ஸ்மால் பாஸ் வீடு என ஒன்றாக இருந்த வீட்டை இரண்டாக பிளவு படுத்தினர். அதில் ஒர சில காரணங்களுக்காக வாரத்திற்கு ஒரு முறை 6 போட்டியாளர்களை அனுப்பும் சம்பவங்களும் நடந்தது. இது மட்டுமன்றி, டபுள் எவிக்ஷன், எவிக்ட் ஆனவர்கள் வைல்ட் கார்டில் எண்ட்ரி என ட்விஸ்டிற்கு மேல் ட்விஸ்டுகள் ஏற்பட்டன. இந்த நிலையில், அப்படி ஒரு புது ட்விஸ்ட்ட இன்று எழுந்தது.
வார இறுதிக்கு முன்னரே எவிக்ஷன்..
பிக்பாஸை பொறுத்தவரை, வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை, போட்டியாளர்கள் அனைவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப சக போட்டியாளர்களை நாமினேட் செய்வர். அப்படி நாமினேட் செய்யப்பட்டவர்களுக்காக வாக்கெடுப்புகள் நடைபெறும். இதில், மக்களின் குறைவான வாக்குகளை பெற்ற நபர் போட்டியில் இருந்து வெளியேறுவார். ஆனால், இந்த வாரம் சனிக்கிழமை-ஞாயிற்றுக்கிழமை எபிசோடிற்கு முன்னதாகவே ஒரு போட்டியாளரை வெளியேற்றியுள்ளனர். இன்று நடைப்பெற்ற இந்த MidWeek எவிக்ஷனில், நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் யார் தெரியுமா?
மேலும் படிக்க | மனைவிக்கு 2 தாலி கட்டிய ரெடின் கிங்ஸ்லி! காரணம் என்ன தெரியுமா?
தப்பிக்க முயன்ற கூல் சுரேஷ்..
நடிகர் கூல் சுரேஷ், பிக்பாஸ் போட்டியில் முதல் போட்டியாளராக களமிறங்கினார். சில நாட்கள் அப்படி-இப்படி தடுமாறினாலும் நன்றாகவே விளையாடி வந்தார். இந்த நிலையில், நேற்று இவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார். இதையடுத்து பிக்பாஸ் இவரை அழைத்து சமாதானம் செய்தார். கடந்த சில நாட்களாகவே வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த கூல் சுரேஷ், அதற்கான முயற்சியிலேயே மொத்தமாக இறங்கிவிட்டார். இன்றையை ப்ரமோவில் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் அனைவரின் புகைப்படத்தை வைத்தும் பசில்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அதில், ஒருவரின் புகைப்படத்திற்கான ஒரு பசில் மட்டும் இருக்காது. அவரே இந்த வீட்டில் இருந்து இன்று வெளியேறும் போட்டியாளர் என்று பிக்பாஸ் கூறினார். கூல் சுரேஷ் தப்பிக்க முயன்றதால் இவர், இன்று வெளியேறிய போட்டியாளராக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா?
பிக்பாஸில் கடந்த சில வாரங்களாக இரண்டு பேரை செலக்ட் செய்து வெளியேற்றி வருகின்றனர். மக்களிடமிருந்து குறைந்த வாக்குகளை பெற்றவரே அப்படி வெளியேற்றப்படும் நபர்களாக உள்ளனர். இந்த வாரம், நிக்ஸன், கூல் சுரேஷ், அனன்யா ராவ் ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் யாரேனும் இருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அசோக் செல்வன் to ரெடின் கிங்ஸ்லி-2023ல் திருமணம் செய்து கொண்ட கோலிவுட் தம்பதிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours