இத்திரைப்படத்தில் தேவையற்ற அதீத வன்முறை மற்றும் ‘Alpha Male’ எனப்படும் அடாவடியான ஆணாதிக்கம் நிறைந்திருப்பதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இப்படம் ஒருபுறம் வசூலைக் குவித்தாலும், மறுபுறம் பலரது கண்டனங்களையும், கடுமையான விமர்சனங்களையும் பெற்றுவருகிறது. குறிப்பாக, இளைய தலைமுறையினரின் மனதில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதாகப் பலரும் கூறிவருகின்றனர்.
இந்த சர்ச்சை பாலிவுட் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாகி வருகிறது. இதே இயக்குநரின் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திலும் இதுபோன்ற பிரச்னைகள் இருந்தன.
இந்நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’, ‘கேப்டன் மில்லர்’ மற்றும் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் விஜய்யின் 68வது படத்தின் ஒளிப்பதிவாளராக இருக்கும் சித்தார்த்தா நுனி, ‘அனிமல்’ திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர், “நான் நேற்று ‘அனிமல்’ படத்தைப் பார்த்தேன். மார்பில் ஸ்வஸ்திகா குறியீட்டுடன் நாஜியைப் பெருமைப்படுத்துவது, ‘Alpha Male’ என்று ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துவது, சட்டத்திற்கு எதிரான வன்முறைகள், திருமணத்தின் பெயரில் பாலியல் வன்முறை, தவறான உறவுமுறைகள் எனப் பல நச்சுகள் இப்படத்தில் இருக்கின்றன.
+ There are no comments
Add yours