‘கூச முனிசாமி வீரப்பன்’ இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும். தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த சீரிஸ் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். கூச முனிசாமி வீரப்பன் சீரிஸ் குறித்து, நக்கீரன் நிருபர் சுப்பு பேசியதாவது..“1993ல என்னுடன் வீரப்பனை சந்திக்க இருவர் வந்தனர். அப்போது புகைப்படங்கள் மட்டுமே எடுத்தோம். அது நக்கீரனில் வந்தது. இது எல்லோருக்கும் தெரியும். பின்னர் 1996 ல் வீடியோ பதிவு செய்து ஒளிபரப்பினோம். நாங்கள் சேகரித்த பல தகவல்கள் உங்களுக்கு இந்த டாக்குமெண்ட்ரி மூலமாகக் கொண்டு வந்து தந்திருக்கிறோம். இதைச் சாத்தியமாக்கிய எங்கள் கோபால் ஆசிரியருக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
டாக்கு சீரிஸின் இயக்குநர் சரத் ஜோதி பேசியதாவது, “எல்லா இயக்குநருக்கும் முதல் புராஜக்ட் ரொம்ப முக்கியமானது. ஷங்கர் சார் கிட்ட இருந்து வெளியே வந்து ஒரு சீரிஸுக்காக உழைத்தோம். கோவிடால அது தடங்கல் ஆயிடுச்சு. அந்த நேரத்தில தான் இந்த வாய்ப்பு வந்ததது. இந்த புராஜக்ட் கேக்க அவ்வளவு பிரமிப்பாக இருந்தது. முதல்ல வீரப்பன எனக்கு அடையாளப்படுத்தியது நக்கீரன் புத்தகம் தான். இப்ப இந்த புராஜக்ட் பண்ணும்போது அந்த புத்தகங்கள் படிச்சேன். அதில் பிரமிப்பை ஏற்படுத்தியது முதல் முதல்ல வீரப்பன தேடிபோன பத்திரிக்கையாளர்களோடு அனுபவம் தான்” என்றார்.
மேலும் படிக்க | பிக் பாஸில் இருந்து விலகும் கமல்? இவர்தான் அடுத்த தொகுப்பாளர்
நக்கீரன் கோபால் பேசியதாவது, “ஷாம், கௌஷிக் ZEE5 க்கு நன்றி ஏனென்றால் முதலில் நக்கீரன் என்றால் தைரியம் வேண்டும், அப்புறம் வீரப்பன் என்றால் இன்னும் தைரியம் வேண்டும். ஆனால் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறார்கள். வீரப்பனின் கதையை எடுப்பதற்காக நிறைய பேர் வந்தார்கள். என் மகள் கேட்பதற்கு முன்பாகவே நிறைய பேர் கேட்டார்கள். ஆனால் இதைச் சரியாகச் செய்ய வேண்டுமே என்கிற தயக்கம் இருந்தது. பாலுமகேந்திரா கூட கேட்டார் ஆனால் மறுத்துவிட்டேன். இதற்காக நாங்கள் எங்கள் டீம் இழந்தது அதிகம். இது வரை வந்தது அனைத்துமே போலீஸ் பார்வையில் வீரப்பனின் கதை. அதைப் பார்க்கும் போதே கோபமாக வரும். பாதிக்கப்பட்டவன் அவ்வளவு பேர் இருக்கிறார்களே, அதைப்பதிவு செய்ய வேண்டுமே, அவர்களுக்குத் தீர்வு வேண்டுமே என்று தோன்றும். பாதிக்கப்பட்டவர்களுக்காக எவ்வளவோ போராடினோம். இதில் வந்திருப்பது வெறும் .001 பகுதி மட்டுமே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை நிவாரணம் இல்லை. அந்த பாதிப்பை வலியை இவர்கள் சரியாகப் பதிவு செய்து விட்டார்கள்” என்றார்.
மேலும், “பல வருடங்களுக்குப் பிறகு நேரில் போய்ப் பல ரிசர்ச் செய்து, அந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். திரையில் அந்தக்கதையை உண்மையாகக் கொண்டு வந்துள்ளார்கள். இதற்காக உழைத்த என் டீம் பலர் ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள் நான் 9 மாதம் ஜெயிலுக்குப் போனேன். நக்கீரனின் இந்த உழைப்பைக் காப்பாற்றிக் கொண்டு வந்த இந்த குழுவிற்கும் ZEE5 க்கும் நன்றி” என்றார்.
மேலும் படிக்க | அயலான் படத்தில் ஏலியனுக்கு வாய்ஸ் கொடுத்தது யார் தெரியுமா? ‘இந்த’ நடிகர்தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours