Suriya: இந்தித் திணிப்பு; அண்ணா சாலை, தலைமைச் செயலகப் படப்பிடிப்பு! – புறநானூறு படத்தின் அப்டேட்

Estimated read time 1 min read

சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு இயக்குநர் சுதா கொங்கரா தமிழில் இயக்கும் படத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

புறநானூறு எனப்பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில், துல்கர் சல்மான், நஸ்ரியா விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இசை’ ஜீ. வி. பிரகாஷ் குமார். அவர் இசையமைக்கும் 100 -வது படம் இது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

Puranaanooru movie

‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளை வென்ற கூட்டணி மீண்டும் புறநானூறு படத்தில் இணைந்திருக்கிறார்கள். இதனால் இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ப படம் குறித்த செய்திகளும் அமைந்திருக்கின்றன. இப்படத்தின் கதை 1950-ம் ஆண்டிலிருந்து 1965-ம் ஆண்டுவரை நடக்கக்கூடியது போல் எழுதப்பட்டிருக்கிறதாம்.

அக்காலகட்டத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். அந்தக்கால சென்னையைக் கண்முன் கொண்டுவர படக்குழு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது. ஆம், அந்தக்காலகட்ட அண்ணா சாலை மற்றும் தலைமைச் செயல வளாகம் ஆகியனபோல அரங்கம் அமைக்கும் பணிகள் வேகமாக நடக்கின்றன. அப்போதைய புகைப்படங்களையும், ஒருசில காணொலிகளையும் ஆதாரமாக வைத்து வேலைகள் நடக்கின்றன.

Puranaanooru movie

அதேசமயம் நிஜமான தலைமைச் செயலகத்திலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கவும் தயாராகியிருக்கிறார்கள். பன்னெடுங்கால தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கதைக்களம். தமிழ்நாட்டு நலன் குறிப்பாக கல்வி நலனில் தீவிரமாக இருக்கும் சூர்யாவின் நடிப்பு இந்தப் படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும் என்கின்றனர். இந்தப்படம் பெரும் கவனம் பெறும் என்பதில் மாற்றமில்லை என்கின்றனர் படக்குழுவினர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours