சைந்தவ் படத்திற்காக தெலுங்கில் தானே டப்பிங் பேசிய நவாசுதீன் சித்திக்
12 டிச, 2023 – 12:45 IST
கடந்த சில வருடங்களாகவே தென்னிந்திய படங்களில் பாலிவுட் குணச்சித்திர நடிகர்களை அழைத்து வில்லன்களாக நடிக்க வைப்பது தவறாமல் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சைந்தவ் என்கிற படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் விகாஸ் என்கிற முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். தெலுங்கு படம் என்றாலும் இந்த படத்தில் தனது காட்சிகளுக்காக தானே சொந்தமாக தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார் நவாசுதீன் சித்திக்.
“எந்த மொழியில் நடித்தாலும் அதில் தனது பேச்சு நம்பகத்தன்மை கொண்டதாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நானாகவே டப்பிங் பேசிக் கொள்வதை தேர்வு செய்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் நவாசுதீன் சித்திக். இதில் கதாநாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக இந்த படம் வெளியாக உள்ள இந்தப்படம் ஒரு கமர்சியல் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது.
+ There are no comments
Add yours