பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் போட்டியில் இருந்து முக்கிய போட்டியாளர் ஒருவர், தப்பிக்க முயன்றுள்ளார். அவர் யார்? அவர் தப்பிக்க முயன்றது ஏன்? இதோ முழு விவரம்.
பிக்பாஸ் சீசன் 7:
2017ஆம் ஆண்டு முதல் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் முதல் சீசனிலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார். ஆங்கிலத்தில் ‘பிக் பிரதர்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியை இந்தியில் பிக்பாஸ் என்ற பெயரில் மாற்றி அதே கான்செப்டுடன் நடத்தினர். அதற்கு 10 வருடங்கள் கழித்துதான் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
தமிழில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் மேல ஆகிவிட்ட நிலையில், இப்போட்டியில் எதிர்பாராத திருப்பங்கள் பல எழுந்துள்ளன. முதன் முறையாக பிரிக்கப்பட்ட பிக்பாஸ் வீடு, ரெட் கார்டு விவகாரம், ஏற்கனவே போட்டியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் போட்டியாளர்களாக உள் நுழைவது, பூகம்ப டாஸ்குகள் என அடுக்கடுக்கான திருப்பங்களுடன் இந்த சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
தப்பிக்க முயன்ற போட்டியாளர்..
பிக்பாஸ் போட்டியை பொறுத்தவரை, ஒரு வீட்டிற்குள் தங்க வைக்கப்படும் அனைத்து போட்டியாளர்களும் 24 மணி நேரமும் அந்த வீட்டில்தான் இருக்க வேண்டும். தொலைபேசியோ, வேறு எந்த வெளியுலக தொடர்போ அவர்களுக்கு கிடையாது. எவிக்ட் செய்யப்படுபவர்கள், விருப்பப்பட்டு போட்டியில் இருந்து விலகுபவர்களை தவிர பிறர் குடும்பத்தை பிரிந்து 100 நாட்கள் இந்த இல்லத்திற்குள் இருந்தே ஆக வேண்டும். இதனால், இந்த போட்டியில் இருப்பவர்கள் உணர்வு ரீதியாக கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்படுவர். அதில் சிலர், என்னை வெளியில் விட்டுவிடுங்கள் என கேமராவிடம் வந்து கெஞ்சுவர்.
இந்த பிக்பாஸ் சீசனில், மக்களின் ஆதரவை பெற்று பலமான போட்டியாளராக கருதப்படுபவர், கூல் சுரேஷ். சில நேரங்களில் “தமிழண்டா..ஜான் சீனா..” என தொண்டை கிழிய கத்தும் இவர், பல நேரங்களில் கேமரா முன் நின்று தன் மகன்-மகளிடம் பேசுவது, “என்னை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள்” என கேட்பது போன்று பல செயல்களில் ஈடுபடுவார். இன்று, அவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
மேலும் படிக்க | கமலை ஓரம் கட்டும் பிக்பாஸ்! 5 நடிகர்களை தேர்வு செய்துள்ள நிறுவனம்!
வைரலாகும் வீடியோ..
இது குறித்து வைரலாகி வரும் வீடியோவில், அவர் ஒரு நாற்காலியை எடுத்து சுற்று சுவரின் அருகே சென்று அங்கிருக்கும் கூரை மீது ஏறி தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் அதற்கு மேல் எப்படி செல்வது என தெரியாததால், அவர் சக போட்டியாளர் மணிசந்திராவின் உதவியுடன் கீழே இறங்கினார்.
#CoolSuresh trying to escape from BB house #BiggBossTamil7 #BiggBossTamil #BiggBoss #BiggBoss7Tamil #BiggBoss7#BiggBossTamilSeason7
— Tharani ᖇᵗк (@iam_Tharani) December 13, 2023
கூல் சுரேஷ் கீழே இறங்கிய பிறகு, பிக்பாஸ் அவரை கன்ஃபஷென் அறைக்கு அழைத்து சமாதானம் செய்தார். இவர் இனி போட்டியில் தொடருவாரா அல்லது வெளியேறிவிடுவாரா என்பது இந்த வார இறுதியில் தெரிந்து விடும். ஏற்கனவே, முதல் சீசனில் நடிகர் பரணி இப்போட்டியில் இருந்து தப்பிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.
மதிப்பை இழந்த பிக்பாஸ்..
இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களிலேயே இந்த சீசன் மிகவும் மோசமாக இருப்பதாக மக்களிடம் இருந்து கருத்துகள் எழுந்துள்ளன. பிக்பாஸில் இருக்கும் தற்போதைய போட்டியாளர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒத்த வயதுடைய இளைஞர்களாக இருக்கின்றனர். இவர்களில் சிலர், அவ்வப்போது தகாத வார்த்தைகளால் பேசிக்கொள்வதுண்டு. ஒரு சிலர், ஆங்கிலத்திலும் பேசுகின்றனர். இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியாளர்கள் பெரிதாக ஆங்கிலத்தில் பேச அனுமதி இல்லை. தகாத வார்த்தைகள் பேசினால் கமல்ஹாசன் வார இறுதியில் வார்னிங் கொடுப்பார். ஆனால், இந்த சீசனில் அப்படி வார்னிங் கொடுக்கப்பட்டும் யாரும் கண்டு கொள்வதில்லை. அது மட்டுமன்றி, இதுவரை கமல்ஹாசனை இந்த அளவிற்கு ரசிகர்கள் ட்ரோல் செய்ததும் இல்லை. இந்த சீசனில் அவை அனைத்துமே நடந்து வருகிறது. இதனால், இப்போட்டி இந்த சீசனில் மதிப்பிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அயலான் படத்தில் ஏலியனுக்கு வாய்ஸ் கொடுத்தது யார் தெரியுமா? ‘இந்த’ நடிகர்தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours