இந்நிலையில், “நடிகர் மயில்சாமி உயிரோட இருந்திருந்தா… இந்த பெருவெள்ள பாதிப்புக்கு களத்துல இறங்கி உதவியிருப்பாரே” என்பதுதான் பலரது ஆதங்கமாகவும் வருத்தமாகவும் உள்ளது. சமூக வலைதளங்களில் இதைப் பலரும் குறிப்பிட்டிருந்தனர்.
2015-ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பின்போது சூறாவளியாய் களத்தில் சுழன்று உணவு, மளிகைப் பொருட்களை வழங்கி பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைத்தார் மயில்சாமி. இப்போது, அவர் இல்லாததால் வருத்தத்துடன் பதிவு செய்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். இந்த நிலையில் மயில்சாமி மகன் நடிகர் அன்புவிடம் பேசினோம்,
“அப்பா உயிரோட இருந்திருந்தா, வீட்லயே அவரைப் பார்த்திருக்க முடியாது. இந்நேரம் வெள்ள பாதிப்பு பகுதிகள்ல உதவி செஞ்சுட்டிருந்திருப்பாரு. உதவி பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா யார் பேச்சையும் கேக்கமாட்டார். கடனை வாங்கியாச்சும் செஞ்சுடுவார். 2015 வெள்ளத்தப்போ நெட்வொர்க் எல்லாம் இல்லாததால நாங்க மட்டும் சொந்த ஊருக்குப் போய்ட்டோம். ஆனா, அப்பா எங்கக்கூட வராம கைல இருந்த பணம், அம்மாவோட நகையெல்லாம் அடகு வெச்சு உதவி செய்தாரு. பைபாஸ் அறுவை சிகிச்சைப் பண்ணினதால ரொம்ப ரிஸ்க் எடுக்க வேணாம்னு எவ்வளவோ சொல்லிப்பார்த்தோம். “எல்லோரும் கஷ்டப்பட்டுட்டுக் கிடக்கும்போது, என்னால எப்படி நிம்மதியா தூங்கமுடியும்?’னு சொல்லி எங்கப் பேச்சைக் கேக்கவே இல்ல.
+ There are no comments
Add yours