இது குறித்துப் பேசிய அவர், “நானும் கிங்ஸ்லியுமே நீண்ட கால நண்பர்கள். அவரது டான்ஸ் மாஸ்டர்கள்தான் எனக்கும் மாஸ்டர்கள் என்பதால், அவருடனான நட்பு இன்றுவரை தொடர்கிறது. திருமண விஷயத்தில் அவர் நம்பிக்கை இல்லாமல் இருந்தார். ‘சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க. இல்லேனா, ஸ்ட்ரெய்ட்டா அறுபதாம் கல்யாணம்தான் பண்ணவேண்டியிருக்கும்‘னு அவரை நாங்க கலாய்ச்சதும் உண்டு. அவரே ஒரு கட்டத்தில் மனசு மாறி, சங்கீதாவைக் காதலித்து வந்தார். இது பல வருடக் காதல்.
இந்நிலையில் மைசூரில் இன்று திருமணம் நடந்திருக்கிறது. நானும் அங்கே இருந்திருக்க வேண்டியது. படப்பிடிப்பில் காலில் ஏற்பட்ட சின்ன காயத்தால் நான் பங்கேற்க முடியல. அதனால உன் கல்யாண போட்டோவை இந்த உலகத்துக்கு நான்தான் தெரிவிப்பேன்னு சொல்லி, இன்று அவர்களின் திருமண போட்டோக்களைப் பதிவிட்டேன்” என்றார்.
+ There are no comments
Add yours