Conjuring Kannappan OTT Release Date And Box Office Collections | பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் கான்ஜுரிங் கண்ணப்பன்.. எந்த ஓடிடி தளத்தில் எப்போது ரிலீஸ்?

Estimated read time 1 min read

கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் முக்கிய அப்டேட்: சதீஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த புதிய தகவல், ஒன்று சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம்:
அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து டிசம்பர் 8ஆம் தேதி வெளியான திரைப்படம் கான்ஜூரிங் கண்ணப்பன். இந்த திரைப்படத்தில் சதீஷ் உடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைபடத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் தயாரித்துள்ளது, யுவா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். தற்போது கான்ஜூரிங் கண்ணப்பன் படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். 

கான்ஜுரிங் கண்ணப்பன் கதைக்களம் மற்றும் விமர்சனம்:
கேம் டிசைனரான சதீஷ், சூனியம் வைக்கப்பட்ட ஒரு ரெக்கையை தொட்டதால் பேய் பங்களாவிற்குள் மாட்டிக்கொள்கிறார். அந்த கனவில் உயிர் பிரிந்தால் நிஜ உலகிலும் உயிர் பிரிந்து விடும் என்ற நிலை ஏற்படுகிறது. ஹீரோ மட்டுமன்றி, அவரது குடும்பமே அந்த கனவிற்குள் சிக்கிக்கொள்கின்றது. பேயின் பிடியில் இருந்து தப்பினார்களா? இறுதியில் என்ன ஆனது என்பதை காமெடியுடன் சொல்ல முயற்சித்திருக்கின்றனர். படத்தில் இடம் பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகள் சில இடங்களில் வர்க்-அவுட் ஆகியுள்ளதாகவும் பல இடங்களில் உச் கொட்ட வைப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் பலர் வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய பேய் படமாக இது உருவாகி உள்ளது என்றும் கூறி வருகின்றனர். எனவே மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகமெங்கும் ரிலீஸ் ஆன கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 

மேலும் படிக்க | தமிழில் படம் இயக்கும் அனுராக் காஷ்யப்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

  • பிளஸ்: புதிய கதைக்களம் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. காமெடி நடிகர்களின் பங்களிப்பு ஒரு சில இடங்களில் நன்றாகவே கை கொடுத்துள்ளது. பின்னணி இசை அற்புதம். விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளும் ஓரளவிற்கு நன்றாகவே உள்ளன. சதீஷ் முந்தைய படங்களை விட இந்த படத்தில் இன்னுமும் சிறப்பாகவே நடித்துள்ளார் என்றே கூறலாம்.
  • மைனஸ்: திரைக்கதை மற்றும் காமெடி காட்சிகள் பெரிதாக கைகொடுக்கவில்லை. பழக்கப்பட்ட பேய் காமெடி படமாகவே இந்த கான்ஜூரிங் கண்ணப்பனும் உள்ளது. யுவன் இசையில் நல்ல பாடல்கள் இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு அந்த போர்ஷனிலும் ஏமாற்றம் தான்.

கான்ஜுரிங் கண்ணப்பன் வசூல்:
இதனிடையே தற்போது கான்ஜுரிங் கண்ணப்பன் வசூல் நிலவரத்தைப் பற்றி பேசுகையில், இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து உள்ளது. அதன்படி முதல்நாளே இப்படம் ரூ.1 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் வெளிவந்த நயன்தாராவின் அன்னபூரணி படம் முதல் நாளில் ரூ.80 லட்சம் மட்டுமே வசூலித்திருந்த நிலையில், கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் அதை மிஞ்சி உள்ளது.

கான்ஜுரிங் கண்ணப்பன் ஓடிடி ரிலீஸ் எப்போது:
இந்நிலையில் தற்போது அற்புதமான விமர்சனத்தை பெற்று வரும் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அடுத்த மாதம் அல்லது இந்த மாத இறுதிக்குள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படமானது நெட்ஃபிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார சினிமா குடும்பம் இதுதான்! சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours