மதுரையைச் சேர்ந்தவர் மோகன். அங்கு அரசு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்படியே சைடில் சென்னையிலிருந்து படப்பிடிப்புக்காக மதுரை, தேனி மாவட்டங்களுக்கு வரும் சினிமாக்காரர்களூக்கு லொகேஷன் பார்த்துத் தருவது முதலான உள்ளூரில் தேவைப்படும் உதவிகளையும் செய்து வந்தார்.
அந்தப் பின்னணியில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கிலி முருகனின் நட்பு இவருக்குக் கிடைத்தது, இந்த நட்பு அப்படியே சினிமா வாய்ப்புகளையும் வழங்க, ‘கும்பக்கரைத் தங்கய்யா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘சீமராஜா’, ‘வீரன்’ முதலான பல்வேறு படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடிக்கவும் செய்தார்.

தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கிய இயக்குநர் அழகர், இவரை சீரியல் பக்கமும் அழைத்து வந்தார்.
“அழகர் திடீர்னு ஒரு நாள் அவசரமாக் கூப்பிட்டப்ப மீசைக்கு டை அடிக்காம அப்படியே போயிட்டேன். என்னைப் பார்த்துட்டு, ‘டை அடிச்சுட்டு இங்க ஆயிரம் பேர் இருக்காங்க. ஆனா நம்ம கேர்கடருக்கு இப்படியே இருக்கட்டும்னே! இதான் நல்லா இருக்கு’ என அவர் தன் சீரியலில் நடிக்க வைத்தார்” என முன்பொரு பேட்டியில் சொன்னவர், தொடர்ந்து ‘மதுர’, ‘சரவணன் மீனாட்சி’, ‘ரோஜா’, ’என் பெயர் மீனாட்சி’ என நிறைய சீரியல்களிலும் நடித்தார்.
+ There are no comments
Add yours