விசித்ரா – விஷ்ணு மோதல்
விஷ்ணு அளித்த விளக்கத்தின் போது, விசித்ராவிற்கு செய்த உதவிகள் பற்றியும் அவர் குறிப்பிட, பிறகு அதை வன்மையாக கண்டித்தார் விசித்ரா. “ஏன் செஞ்சத சொல்லிக் காட்டறே… இனிமே எனக்கு எந்த உதவியும் செய்ய வேணாம். நானே பார்த்துக்கறேன்” என்று அவர் கண்டிப்பான குரலில் சொல்ல, ‘பிள்ளை வளர்ப்பு’ என்னும் தலைப்பில் இருவரும் முட்டிக் கொண்டார்கள். ‘என் பையனா இருந்தா’ என்று விசித்ரா ஆரம்பிக்க “உங்களை மாதிரி யாரும் மாத்தி மாத்தி பேச மாட்டாங்க” என்று தனிப்பட்ட வகையிலான மோதலாக இது முடிந்தது.
இந்த இடத்தில் விசித்ராவிடமுள்ள ஒரு பிளஸ் பாயிண்ட் பற்றிச் சொல்ல வேண்டும். பற்ற வைத்தல், அணி மாறுதல், புறணி பேசுதல் போன்றவை இவரிடமும் இருக்கின்றன. ஆனால் தன்னுடைய உடல் திறன் பற்றியோ, வயது பற்றியோ யாராவது கமென்ட் அடித்தால் முதலில் வருந்தினாலும் பிறகு அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளும் குணாதிசயம் அவரிடம் இருப்பது ஒரு நல்ல விஷயம். அது மட்டுமல்லாமல், ‘அம்மா கேரக்டர்’ போட்டியாளர்கள் விரைவில் வெளியேறுவதுதான் பிக் பாஸ் ஆட்டத்தின் மரபு. ஆனால் விசித்ரா இத்தனை நாள்கள் தாக்குப்பிடிப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
சைக்கிள் ஓட்டும் நபரை மாற்ற வேண்டிய நேரம். மணி இதற்கு விருப்பம் தெரிவித்தார். அவருக்கு வெளிப்படையான ஆதரவை ரவீனா தெரிவித்து துள்ளிக் குதித்தார். ஒருவரின் நட்பு ஆட்டத்தைப் பாதிக்கும் என்கிற வகையில் இது தவறான மூவ். மணியும் ரவீனாவும் இதை அமைதியான முறையில் நிகழ்த்தி வருகிறார்கள். தான் சைக்கிள் ஓட்ட ஆசைப்பட்டதை பலரிடமும் முன்னமே சொல்லியிருந்தார் விசித்ரா. ஆனால் இப்போது எவரும் வாக்களிக்காததால் தலையணைகளை சின்ன வீட்டுப் பக்கம் தூக்கியெறிந்து “ஒழுங்கா ஓட்டுப் போடுங்க” என்று ஜாலியாக மிரட்டினார். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விக்ரம் மற்றும் அர்ச்சனா.
+ There are no comments
Add yours