நான் திரைத்துறைக்கு வந்த காலம் தொட்டே, பிரபல நடிகர்களைச் சந்தித்து, அவர்களிடம் தேதி வாங்கி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றைக்குமே ஏற்பட்டது இல்லை. இதை பல நேர்காணல்களில் நான் கூறியிருக்கிறேன் என்பதும் மறுக்க முடியாத உண்மை. மேலும், திரு.ஞானவேல்ராஜா அவர்களே பல நேர்காணல்களில் ‘பருத்திவீரன்’ திரைப்படத்துக்கு 4 கோடியே 85 லட்ச ரூபாய் செலவிட்டதாகக் கூறியுள்ள போது, தாங்கள் 6 கோடி ரூபாய் செலவானதாகத் தவறான தகவலை அளித்துள்ளீர்கள்.
மிக முக்கியமாக, ‘Team Work Production House’ என்ற நிறுவனத்தின் பெயரில் இருந்த எனது “பருத்திவீரன்” திரைப்படத்தை, ‘Studio Green’ நிறுவனத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின், யார் யாருக்கு எந்தெந்த? ஏரியாக்கள் விநியோக உரிமையாகக் கொடுக்கப்பட்டன என்ற விவரத்தையும், அன்றைக்கு நடந்த பேச்சுவார்தையின் போது யார், யார் உடனிருந்தார்கள் என்பதையும், அவர்களில் யார், யார் என்னென்ன பேசினார்கள் என்பதையும் தாங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். ஒருவேளை அதையும் தாங்கள் மறந்திருந்தால், அனைத்து விவரங்களையும் இனி வரும் காலங்களில் வெளியிடத் தயாராக இருக்கிறேன்.
இறுதியாக அந்த நேர்காணலில், “படம் வெற்றி பெற்றுவிட்டது. அதனால், Studio Green நிறுவனத்தார், அமீருக்கு ஏதாவது நஷ்ட ஈடு தரவேண்டும்” என்றும், “திரு.ஞானவேல் அவர்கள் ஏதேனும் பணம் தரவேண்டும்” என்றும் கூறியிருக்கிறீர்கள்.
நான் பெற விரும்புவது யாசகம் அல்ல… என்னுடைய உரிமையை என்பதை மீண்டும் மீண்டும் தங்களுக்கும், இப்பிரச்னை சார்ந்தோர்க்கும் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours