யாஷ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்: ‘கேஜிஎஃப்’ படத்துக்குப் பிறகு யாஷ் நடிக்கும் புதிய படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இந்த திரைப்படத்துக்கு ‘டாக்ஸிக்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் யாஷ்:
கேஜிஎப், கேஜிப் 2 (KGF, KGF 2) ஆகிய படங்களின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளார் நடிகர் யாஷ். முன்னதாக கன்னடத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படங்கள் யாஷிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளன. இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருந்த இந்தப் படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியான நிலையில் பான் இந்தியா ஸ்டாராகவும் உயர்ந்துள்ளார் யாஷ். குறிப்பாக கேஜிஎப் 2 படம் மிகப்பெரிய வசூலை பெற்றது.
டாக்ஸிக் திரைப்படம்:
இதனிடையே பிரசாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’ (KGF Movie) திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் யாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பெரும் பிரபலமடைந்த யாஷ், தனது அடுத்த திரைப்படத்தின் கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்.
மேலும் படிக்க | மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்! அதிரடி டீசர் வெளியானது!
இந்த நிலையில், தற்போது நடிகர் யாஷ் (Yash) நடிக்கும் 19_வது திரைப்படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்குகிறார். இவர் தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் மாதவன் நடித்த ‘நள தமயந்தி’ படத்தில் நாயகியாக நடித்தார். மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த ‘மூத்தோன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘டாக்ஸிக்’ (Toxic) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ், மாஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த டாக்ஸிக் திரைப்படத்தை தயாரிக்கின்றன. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘What you seek is seeking you’ – Rumi
A Fairy Tale for Grown-ups
#TOXIChttps://t.co/0G03Qjb3zc@KvnProductions #GeetuMohandas— Yash (@TheNameIsYash) December 8, 2023
AFTER ‘KGF 2’, YASH’S NEXT FILM TITLED ‘TOXIC’… After the #Blockbuster success of #KGF2, #Yash’s next film – directed by #GeetuMohandas – is titled #Toxic: A Fairy Tale For Grown-ups.
Produced by KVN Productions and Monster Mind Creations, the film will be release on 10 April… pic.twitter.com/AfQ1DCMiYb
— taran adarsh (@taran_adarsh) December 8, 2023
கேஜிஎப் சீரிஸ்:
இதற்கிடையில் கேஜிஎப் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தப் படத்தை பிரஷாந்த் நீல் இயக்கப் போவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கான வேலைகள் 2025 ஆம் ஆண்டில் துவங்கும் என்றும் முன்னதாகவே கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கணவரை பிரியும் ஐஸ்வர்யா ராய்? வீடியோ மூலம் வெளிவந்த உண்மை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours