இப்படித்தான் டின்னர் சாப்பிடணும் – ஜான்வி கபூர்
07 டிச, 2023 – 12:12 IST
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராம் தளத்தில் 22 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களைப் பெற்றுள்ளார். தனது தளத்தில் அடிக்கடி விதவிதமான கிளாமர் போட்டோக்களைப் பதிவிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்துவார். அவரது தங்கை குஷி கபூர் நடிகையாக அறிமுகமாகும் ‘த ஆர்ச்சிஸ்’ என்ற படத்தின் பிரிமியர் காட்சியில் நேற்று முன்தினம் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய கறுப்பு நிற கவுன் ஒன்றை அணிந்து வந்தார்.
அதே ஆடையில் டின்னரிலும் கலந்து கொண்ட ஜான்வி கபூர் விதவிதமான புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். ரசித்து ருசித்து சாப்பிடுவது, கூல்டிரிங்ஸ் குடிப்பது ஆகிய கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ஒரு பக்கம் அக்கா ஜான்வியின் புகைப்படங்களும், மற்றொரு பக்கம் தங்கை குஷியின் புகைப்படங்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
+ There are no comments
Add yours