தன் சக்தியை வைத்து இருவரை நாமினேட் செய்த விஷ்ணு
அதிக ஸ்டார்களை பெற்று இரண்டு நபர்களை நாமினேட் செய்யும் சக்தியைக் கொண்டிருக்கும் விஷ்ணு இப்போது அதை செயல்படுத்தினார். முதலில் இவர்கள் திட்டமிட்டது மாயா மற்றும் ஜோவிகாவை. ஆனால் பிறகு பிளான் மாறிவிட்டது போல. மாயா மற்றும் அக்ஷயாவின் பெயரை பிக் பாஸிடம் அதிகாரபூர்வமாக அறிவித்தார் விஷ்ணு. அக்ஷயாவை அடிக்கவெல்லாம் இந்த சக்தியை வீணாக்க வேண்டுமா என்ன?! “கியாரே… டீலிங்கா?” என்று விஷ்ணுவிடம் கிண்டலாக விசாரித்தார் மாயா.
சூட்டோடு சூடாக இந்த வார நாமினேஷன் பிராசஸஸையும் கூடவே ஆரம்பித்தார் பிக் பாஸ். முதலில் சின்ன வீடு ஆரம்பித்தது. மணி மற்றும் அர்ச்சனாவை இவர்கள் டார்கெட் செய்ய தீர்மானித்தார்கள். அது சாத்தியம் ஆயிற்று. ‘விசித்ராவிற்கு நன்றிக்கடன் ஆகவும் கருவியாகவும் அர்ச்சனா இருக்கிறார்’ என்ற காரணத்தை பிராவோ சொன்னது சரியானது. என்றாலும் சில டார்கெட்டுகள் வீணாகின.
“வேஸ்ட் பண்ணிட்டோமே.. இன்னும் ஒரு ஆளை தூக்கி இருக்கலாம்” என்று சலித்துக் கொண்டார்கள். சின்ன வீட்டிற்கு கோட் வேர்டில் பேசத் தெரியாதோ?!
அடுத்ததாக பெரிய வீடு நாமினேஷனை ஆரம்பித்தது. ‘ஒட்டுண்ணி போல யாரையாவது சார்ந்து இருந்து பிழைக்கிறார்’ என்று பூர்ணிமாவிற்கான காரணத்தைச் சொன்னார் தினேஷ். ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்கிற காரணத்தை விஷ்ணுவிற்கு சொன்னார் மாயா. பெரிய வீடும் சில முக்கிய டார்கெட்டுகளை வீழ்த்துவதில் தோல்வி அடைந்தது. ‘என்னது….நாம தப்பிச்சிட்டோமா?’ என்று விக்ரம், விஷ்ணு, ஜோவிகா ஆகியோர் மகிழ்ச்சி அடைந்தார்கள். “வேஸ்ட் ஃபெல்லோஸ்” என்று பெரிய வீட்டை நோக்கி கிண்டல் செய்தார்கள்.
ஆக இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் மாயா, அக்ஷயா, மணி, அர்ச்சனா, ரவீனா, விசித்ரா, பிராவோ மற்றும் பூர்ணிமா.
+ There are no comments
Add yours