தினேஷ் பிக் பாஸ் சென்றிருக்கும் நிலையில் அவரது சோஷியல் மீடியாவை இவர்தான் தற்போது ஹேன்டில் செய்து வருகிறார்.
“‘தினேஷுக்கும் எனக்கும் பல வருஷ நட்பு. நண்பன்னு சொல்றதைவிட எங்க வீட்டுல ஒருத்தனாத்தான் அவனை நினைக்கிறேன். என் குழந்தை மேல உயிரா இருப்பான். அந்தக் குழந்தைக்கு மொட்டை போட்டப்ப தாய்மாமன்னு அவன் மடியில உட்கார வச்சுதான் மொட்டை போட்டுக் காது குத்துனோம். அப்ப ஒரு வார்த்தை சொன்னான், `என் மனைவி கூட என்னை மதிக்காம விட்டுட்டுப் போயிட்டாங்க. ஆனா நீ தாய் மாமன் அந்தஸ்து தந்திருக்கன்னு!’ அந்த வார்த்தையைக் கேட்ட நொடி எனக்கு ரொம்பவே கஷ்டமாயிடுச்சு. இப்பவும் காலையில் பத்து மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பினான்னா, இரவு தூங்கத்தான் வீட்டுக்குப் போவான். மற்ற நேரம் வேலை இல்லாட்டியும் வீட்டுக்குப் போக மாட்டான். காரணம் தனிமை. அதுவும் கடந்த மூணு வருஷமா தனிமையால ரொம்பவே கஷ்டப்பட்டுகிட்டு இருக்கான்.
ரச்சிதாவும் எனக்குத் தங்கச்சி மாதிரிதான். அவங்க ரெண்டு பேருக்குமிடையிலான பிரச்னை என்னன்னு அவங்க ரெண்டு பேரைத் தவிர வேற யாருக்கும் நூறு சதவிகிதம் தெரியாது. அதனாலேயே என்னதான் நண்பண்னாலும் ஓரளவுதான் என்னால அந்த விஷயத்துல அவனுக்கு உதவ முடிஞ்சது. பிக் பாஸ் போகணும்கிறது அவனுடைய தீவிரமான ஆசை. கடந்த சீசன்லயே ரச்சிதா டைட்டில் வாங்கிடுவாங்கன்னு அசைக்க முடியாத நம்பிக்கை அவங்கிட்ட இருந்தது. ஆனா அது நடக்காததுல வருத்தப்பட்டான்.
+ There are no comments
Add yours