Aishwarya Rai Abhishek Bachchan Divorce Rumours Comes To An End

Estimated read time 1 min read

பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர், ஐஸ்வர்யா ராய். இவர், நடிகர் அபிஷேக் பச்சனை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 16 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய்:

இந்தியாவில் உள்ள பலருக்கு இன்றளவும் “உலக அழகி” என்றால் ஐஸ்வர்யா ராய்தான் நினைவிற்கு வருவார். அந்த அளவிற்கு அழகும், திறமையும் நிறைந்த நடிகை இவர். 90கள் மற்றும் 2000ம் ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து, கோலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்தார். 

தமிழ் மட்டுமல்ல பாலிவுட்டிலும் இவருக்கு இருந்த மவுசு இன்னமும் குறையவில்லை. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் தூம் 2 படத்தில் முதன் முதலில் ஒன்றாக நடித்தனர். அப்போது, இருவரும் காதல் வயப்பட்டனர். அதன் பிறகு குரு படத்திலும் இருவருக்கும் ஒன்றாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் கிரீன் சிக்னல் கொடுத்த நிலையில், 2007ஆம் ஆண்டே திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு 2011ஆம் ஆண்டு ‘ஆராத்யா’ என்ற மகள் பிறந்தார். அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய்க்கு திருமணமாகி கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பிருந்து இவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

மேலும் படிக்க | பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!

விவாகரத்து குறித்து செய்தி பரவ காரணம்..

நடிகர் அபிஷேக் பச்சன், எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அதில் தனது குடும்பத்தை பற்றி பேசாமல் இருக்க மாட்டார். ஒரு நேர்காணலில் தனது மனைவிதான் தான் இந்த அளவிற்கு வேலை செய்ய அனுமதிக்கிறார் என்று கூட கூறியிருக்கிறார். இந்த நிலையில், அவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தனது திருமண மோதிரத்தை இவர் அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, சில நாட்களாகவே அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ஒன்றாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் இருந்தனர். இதனால், இவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கு அபிஷேக்-ஐஸ்வர்யா தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படாததால் ரசிகர்கள் இந்த தகவலை உண்மை என்றே நம்ப ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. 

வைரலாகும் வீடியோ..

அபிஷேக் பச்சனின் சகோதரி ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்தியா நந்தா, ‘தி ஆர்ச்சீஸ்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைக்கிறார். இந்த படத்தின் ப்ரீமியர் ஷோ, சமீபத்தில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், இவர்களின் மகள் ஆராத்யா, நடிகர் அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன் என குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இதனால், ஐஸ்வர்யா ராயின் திருமண வதந்தி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | தஞ்சாவூர் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த அவெஞ்சர்ஸ் பட நடிகர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours