சென்னையில் கடந்த சில நாட்களாக மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சென்னை மழை வெள்ளம் குறித்து தனது x வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் `மிக்ஜாம்’ புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைதளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.#கைகோர்ப்போம் துயர்துடைப்போம்
Car Insurance: மழையில் மூழ்கிய கார்; இன்ஷூரன்ஸ் எப்படி? சில விளக்கங்கள்!
Chennai Rains: மழை நேரங்களில் வாகனங்களைப் பாதுகாப்பதற்கான சில டிப்ஸ்!
+ There are no comments
Add yours