“கே.எஸ் ரவிக்குமாருக்கு தில்லு இருந்தா அம்மா இருக்கும்போது சொல்லியிருக்கணும்!” – ஜெயக்குமார் |admk jayakumar interview about k.sravikumar’s speech

Estimated read time 1 min read

“படையப்பா’ பட வில்லி நீலாம்பரி கதாப்பாத்திரத்தை ஜெயலலிதாவை மனதில் வைத்துதான் எழுதினேன் என இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு பின்னணியை உடைத்திருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘முத்து’ வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவையொட்டி டிசம்பர் 8 ஆம் தேதி ‘முத்து’ மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன், நிறைவு விழா கொண்டாட்டத்தில் “படையப்பா படத்துல நீலாம்பரி கேரக்டர் அப்படியே ஜெயலலிதா மேடம்னு எல்லோரும் சொல்வாங்க. அது உண்மைதான். நான் எழுதும்போது, ஜெயலலிதா மேடத்தை மனசுல வெச்சுத்தான் எழுதினேன். ஒரு கம்பீரமான பெண்ணுக்கு எப்படிப்பட்ட உடல்மொழி இருக்கணுமோ அதையெல்லாம் அவங்களை நினைச்சு ஃபீல் பண்ணி எழுதினேன்” என்று பேசினார். இது, இப்பெருமழை சூழலிலும் அதிமுக வட்டாரத்தில் அனலைக் கிளப்ப இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது…

K.S.Ravikumar wth Rajinikanth

K.S.Ravikumar wth Rajinikanth

“அம்மாவின் ஆளுமை, அறிவு, ஆற்றல், திறமை என்ன? என்பதை கே.எஸ் ரவிக்குமார் யோசித்திருக்க வேண்டாமா? அவருக்கு, உண்மையிலேயே தில்லு இருந்தா இந்தக் கருத்தை அம்மா உயிரோட இருக்கும்போது சொல்லியிருக்கணும். அதைவிட்டுட்டு, இப்போ வந்து சொல்றது கோழைத்தனம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours