`பிக் பாஸ்’ தமிழ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மக்கள் வாக்குகளால் வெளியேறிவர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு என பிக் பாஸ் அறிவித்த பிறகு யார் வீட்டிற்குள் மறுபடி செல்வார்கள் என்கிற ஆர்வம் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பலரும் தங்களது விருப்பமான போட்டியாளர்கள் செல்வார்கள் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் விஜய் வர்மா வீட்டுக்குள் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து மூணாவது வாரத்தில் எவிக்ட் ஆன பிறகு அவரிடம் பேசினோம். அப்போது அவரிடம் பேசியதிலிருந்து,
“பிக் பாஸ் வீட்டுக்குள்ள என்னப் பேசுறதுன்னு தெரியாம கோபமா பேசின சில வார்த்தைகள் தான் எனக்கு பின் விளைவை ஏற்படுத்தியிருக்கு. அந்த வீட்டுல பிரஷர்ல பேசின விஷயங்கள் தானே தவிர மனசுல இருந்து வேணும்னே எந்த வார்த்தையையும் விடல. பிரதீப்கிட்ட வெளியில என் நண்பர்கள் இருக்காங்கன்னு சொன்னதுகூட தெரியாம விளையாட்டா பேசினதுதான். விஷ்ணு அதை பெருசாக்கிட்டாரு. அந்த விஷயம் பெருசாகிடுச்சு!” என்றவரிடம் வீட்டிலிருந்து வெளியே வரும் போது மாயா உங்ககிட்ட ஏதோ சொன்னாங்களே? எனக் கேட்டோம்.
“வைல்டு கார்டுன்னு மாயா என் காதுல சொன்னாங்க. பிக் பாஸ் போகிறதுக்கு முன்னாடியே மாயாவை எனக்குத் தெரியும். நான், விஷ்ணு, கூல் சுரேஷ் அண்ணா தான் எப்பப் பார்த்தாலும் பேசிட்டு இருப்போம்.

மூணாவது வாரமே எவிக்ட் ஆவேன்னு கொஞ்சமும் நினைக்கல. அதை ஏத்துக்கிறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இப்ப வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு நிறைய சப்போர்ட் வருது. எனக்கு இன்னொரு சான்ஸ் கிடைச்சதுன்னா நாம போய் கேம் சேஞ்சர் ஆன ஒரு ஆளாக இருக்கலாம்னு நினைச்சிருக்கேன். இன்னொரு வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா அதை சரியா பயன்படுத்திப்பேன்!” எனக் கூறியிருந்தார்.
விஜய் வர்மா நமக்கு அளித்திருந்த பேட்டியை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்!
+ There are no comments
Add yours