இலங்கையில் ராணா தம்பியின் திருமணம்
06 டிச, 2023 – 11:01 IST
‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்தவர் தெலுங்கு நடிகரான ராணா டகுபதி. அவரது தம்பி அபிராம். இவரது திருமணம் இன்று இலங்கையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற உள்ளது. அதற்காக அவரது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் இலங்கை சென்றுள்ளனர். ராணா, நாக சைதன்யா, வெங்கடேஷ் உள்ளிட்டவர்கள் ஐதராபாத் விமான நிலையத்திலிருந்து இலங்கை சென்றனர்.
அபிராம் திருமண நிச்சயதார்த்த சில மாதங்களுக்கு முன்பே நடைபெற்றது. ஆனால், அது பற்றி அவரது குடும்பத்தினர் எதுவும் சொன்னதில்லை. நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் என இரு தரப்பிலும் 200 பேர் வரை இலங்கை சென்றுள்ளதாகத் தெரிகிறது. அபிராம் திருமணம் செய்து கொள்ள உள்ள பிரதியுஷா, அபிராமின் தாத்தாவும் திரைப்படத் தயாரிப்பாளருமான மறைந்த டி ராமாயுடுவின் சொந்த கிராமமான கரம்சேடு கிராமத்தைச் சேர்ந்தவராம்.
இலங்கையில் இன்றிரவு திருமணம் முடிந்த பின் அடுத்த சில நாட்களில் மணமக்கள் ஐதராபாத் திரும்பியதும் திரைப்படத் துறையினருக்காக ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்த உள்ளார்களாம்.
அபிராம் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘அஹிம்சா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் தோல்வியடைந்தது.
+ There are no comments
Add yours