பலரும் இதுதொடர்பாக குரல் கொடுத்து வரும் நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் தனது X வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அந்தப்பதிவில், “ கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 100 மணி நேரமாவது முழங்கால் அளவு தண்ணீர் நீடிப்பதும், மின்வெட்டும் ஏற்படுவதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. இது கடினமான உண்மைதான்.
ஆனால் இந்த வருடம் பெய்த மழை புதிய வரையறைகளை அமைத்திருக்கிறது. குறிப்பாக கொளப்பாக்கம் என்பது ஒரு ஏரியோ தாழ்வான பகுதியோ அல்ல. சென்னையில் மற்ற எந்தப் பகுதியையும் விட இங்கு ஏராளமான திறந்தவெளிகளும், குளங்களும் உள்ளன. அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை இவையெல்லாம் மழைநீர் மற்றும் கழிவு நீரை ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது.
+ There are no comments
Add yours