அந்தச் சமயத்துல கனகா வெளியே வந்தாங்க. பார்த்துப் பேசினேன். என்னைப் பார்த்ததுல அவங்களுக்கும் ரொம்ப சந்தோஷம். தேவிகா மேம் பத்தி நிறைய பேசினோம். நானும் உங்க அம்மா மாதிரிதான்னு கனகாகிட்டே சொன்னேன். அதுக்கு அவங்க, ‘நீங்க எப்படி எனக்கு அம்மாவாக முடியும். அம்மாவோட படத்துல நீங்க அவங்க பொண்ணாகத்தானே நடிச்சிருக்கீங்க. அதனால நீங்க அக்காதான்’னு சொன்னாங்க.
கனகா வீடு, அவங்க அம்மா வாழ்ந்த வீடுன்னால, இப்ப பார்க்கறதுக்கு பாழடைந்த கோயில் மாதிரி ஆகிடுச்சு. இப்படி ஒரு வீட்டுல ஏன் இருக்கே, அழகான பிளாட்ல இருந்தால், பாதுகாப்பும் இருக்குமேன்னு சொன்னேன். கேட்டுக்கிட்டாங்க.
கனகாவோட இடத்தை சாலை விரிவாக்கத்தின் போது அரசாங்கம் எடுத்திருந்ததாகவும், அதுக்கான காம்பன்சேஷன் தொகை வரவேண்டியிருக்குதுன்னும் சொன்னாங்க. உடனே நான் அவங்ககிட்ட, இது விஷயமா சம்பந்தப்பட்டவங்களோடு பேசி, அந்தத் தொகையை வாங்கித்தர்றேன்னு சொல்லியிருக்கேன். உனக்குக் கல்யாணம் ஆகல. குழந்தையும் இல்ல. இந்தச் சொத்து யாருக்கோதானே போகப்போகுது. இப்படி இருக்க வேணாம். புதுவீடு வாங்கு. வாழ்க்கையை அனுபவி… வெளிநாட்டுக்கு டூர் போயிட்டு வான்னு பல விஷயங்கள் சொன்னேன். அவங்களுக்கு வெளிநாடு போகப்பிடிக்கும்னு சொன்னாங்க. அப்புறமென்ன, வெளிநாடு போய் சுத்திப் பாரு. வாழ்க்கையைக் கொண்டாடுன்னு சொன்னேன். சந்தோஷமாகக் கேட்டுக்கிட்டாங்க. அவங்களை ரொம்ப நாள்களுக்குப் பிறகு பார்த்திருந்தாலும்கூட, கனகாவை முன்னாடியே வந்து பார்த்திருக்கலாமேன்னு மன உறுத்தல் ஆகிடுச்சு. இவ்ளோ நாள் ஏன் பார்க்காமல் விட்டுட்டோம்னு தோணுச்சு. எல்லாத்துக்கும் ஒரு நேரம் அமையணுமே!” என்கிறார் குட்டி பத்மினி.
+ There are no comments
Add yours