ஆனால், நான் வரும்போது என்னுடன் ஒரு உதவியாளனை அழைத்து வருவேன் என்று அவர் கூறினார். அதற்கு டி.ஆர். சுந்தரமும் ஒப்புக்கொண்டார். சேலம் மாடர்ன் தியேட்டருக்கு தன் உதவியாளருடன் வந்த உடுமலை நாராயணனைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போனார்கள். ஏனென்றால், உதவியாளராக உடுமலை நாராயணனால் அழைத்து வரப்பட்டவர் மருதகாசியா. பின், அந்த மேலாளருக்கும் மருதகாசிக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளை சுமூகமாக தீர்த்து வைத்துவிட்டு, ‘என்னை விட அருமையாக பாடல்கள் எழுதுபவன் மருதகாசி. எனவே, நான் வந்ததற்காக ஒரு பாடலை எழுதுகிறேன்.
மீதம் உள்ள ஒன்பது பாடல்களையும் மருதகாசியே எழுதட்டும்’ எனக் கூறி, தான் எழுதிய ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் பணத்தை வாங்கிக் கொண்டு தன்னைவிட சிறப்பாக பாடல் எழுதும் கவிஞனுக்கு வழி விட்ட நிகழ்வு நடைபெற்ற இடம் சேலம்” என பெருமையுடன் கூறினார்.
மேலும், ‘மாமன்னன்’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘மலையில தான் தீ பிடிக்குது ராசா’ என்ற வரிகள் ஒரு நாட்டுப்புறப் பாடலில் இருந்து எடுத்து எழுதியதாகப் பகிர்ந்து கொண்டார். இறுதியாக, தான் இளமையில் படித்த கிழ குழந்தை என்ற ஒரு கதையின் தொடர்ச்சியைக் கூறி அனைவரின் மனதிலும் நீங்காத ஒரு கருத்தை நிலை நிறுத்தி தன் உரையை நிறைவு செய்தார்.
+ There are no comments
Add yours