பிராவோ எலிமினேஷன் – ‘நான் நானா இருந்தேன்’
“நான் நானா இருந்தேன். எல்லோர் கூடயும் ஜாலியா, ஃபிரெண்டா இருக்கத்தான் முயற்சி செஞ்சேன்” என்றார், மேடைக்கு வந்த பிராவோ. “பையன்களுக்கும் பாலியல் தொந்தரவு வரும். அம்மாக்கள் பார்த்துக்கணும்” என்கிற செய்தியை மீண்டும் அவர் மேடையில் பகிர “ஆம். சின்னப் பசங்களா இருந்தா அதைச் சொல்லக் கூட தெரியாது. வீட்டில் இருக்கும் அம்மாக்கள், அக்காக்கள்தான் அவங்களுக்கு ஆதரவா இருக்கணும்” என்று இதை வழிமொழிந்தார் கமல்.
பிராவோவை வாழ்த்தி விடை தந்த கமல், வீட்டிற்குள் வந்து ‘உள்ளே, வெளியே விளையாட்டைப் பற்றி நாளைக்கு விவரமா சொல்றேன்’ என்கிற சஸ்பென்ஸூடன் விடைபெற்றார். “என்னை மட்டும் வெச்சு செஞ்சாரு. அவரை விட்டுட்டாரு” என்று அனத்திய பூர்ணிமாவிடம் “நீ செஞ்ச காரியம் சும்மாவா, ஒட்டுமொத்தமா அஞ்சு பேரைல்ல அப்படியே தூக்கினே?” என்று விஷ்ணுவும் விசித்ராவும் அவரைக் கிண்டலடித்தார்கள். நல்ல வேளையாக, கமலைப் பற்றி எந்தவொரு விபரீத வார்த்தையையும் பூர்ணிமா இந்த அனத்தலின் போது சொல்லவில்லை.
“நான் எதை எதையெல்லாம் விமர்சிக்கணும்னு நீங்க முடிவு பண்ண முடியாது. ‘இந்த வாரம் மட்டும் அவரு கேக்கலைன்னா இருக்கு’ன்னு நீங்க சொல்ல முடியாது. கேக்கலைன்னா என்னை என்ன பண்ணிடுவீங்க?” என்று கமல் கோபமாக வெடிக்கும் கேட்கும் கேள்வியோடு அடுத்த எபிசோடு தொடர்பான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அந்தக் கோபம், பூர்ணிமாவின் அனத்தல் தொடர்பானதாக இருக்கலாம். இருக்கு.. சம்பவம் இருக்கு…
அக்ஷயாவின் எவிக்ஷன், வீட்டின் உள்ளே வரும் இரண்டு வைல்டு கார்டு என்ட்ரிகள் (விஜய், அனன்யா) உள்ளிட்ட விவரங்களோடு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
+ There are no comments
Add yours