பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் அப்படத்தை இயக்கிய அமீர் இருவருக்கும் இடையேயான மோதல்தான் தற்போது தமிழ் சினிமாவின் ‘டாக் ஆஃப் தி’ டவுனாக இருக்கிறது.
பலரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தற்போது வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் , “ பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன் அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.
அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours