நடிகர் ஷாருக்கான் ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டி, படத்தயாரிப்பு மூலம் சம்பாதிக்கிறார் என்றால் நடிகர் சல்மான் கான் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு வகையான தொழில்கள் மூலம் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரின் “டைகர் 3′ படம் வசூல் ரீதியாகச் சாதனை படைத்துவருகிறது. அதோடு இப்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியையும் சல்மான் கான் நடத்தி வருகிறார்.
மேலும் படங்கள் தயாரித்தல் மற்றும் வேறு படங்களை வாங்கி வெளியிடுதல் ஆகியவற்றின் மூலமும் சல்மான் கான் வருமானம் ஈட்டி வருகிறார். 2012-ம் ஆண்டு ‘யாத்ரா.காம்’ என்ற இணையத்தளத்தில் சல்மான் கான் முதலீடு செய்தார். தற்போது இதில் சல்மான் கானுக்கு ஐந்து சதவிகிதப் பங்குகள் இருக்கின்றன. ஆன்மொபைல் குளோபல் லிமிடெட் நிறுவனத்தில் சல்மான் கான் கணிசமான அளவு முதலீடு செய்திருப்பதோடு அந்நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் இருந்து வருகிறார்.
2012ம் ஆண்டிலிருந்து ‘பியிங் ஹியூமன்’ என்ற தனது தொண்டு நிறுவனத்திற்கு உதவுதற்காக ஆடை வர்த்தகத்திலும் சல்மான் ஈடுபட ஆரம்பித்தார். தற்போது இந்தியா முழுக்க இந்த ஆடைகளை விற்பனை செய்வதற்காகவே 90 கடைகளைத் திறந்திருக்கிறார். இவற்றை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சல்மான் கான் விரிவுபடுத்தி இருக்கிறார்.
+ There are no comments
Add yours