இதனையடுத்து க்ளைமாக்ஸில் டைலர் டுர்டன் என்பவர் தனி நபர் கிடையாது. அவர் எட்வர்டின் ‘ஆல்டர் ஈகோ’தான் என்கிற ட்விஸ்ட்டைக் கட்டவிழ்த்திருப்பார்கள். இத்திரைப்படத்தின் இறுதி காட்சியில் தனது எண்ணத்தை மாற்றி டைலர் டுர்டனை போக வைப்பதற்கு சில யுக்திகளைக் கையாண்டிருப்பார் எட்வர்ட். இது மாதிரியான பல டெம்ப்ளேட்கள் கதை சொல்லலில் புதிய ட்ரண்ட்டை உருவாக்கியது என்றே கூறலாம். விக்ரம் நடிப்பில் வெளியாகியிருந்த ‘அந்நியன்’ திரைப்படத்தின் முக்கிய சாரம்சமே ‘ஸ்பிலிட் பர்சனாலிட்டி’ கான்சப்ட்தான். தான் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் வெளிப்பாடுதான் ‘அந்நியன்’ கதாபாத்திரமும் ‘ரெமோ’ கதாபாத்திரமும். பலரால் பெரிதும் ரசிக்கப்பட்ட இந்த கான்சப்டுக்கு தொடக்கப் புள்ளி ‘ஃபைட் கிளப்’ போன்ற திரைப்படங்கள்தான்.
இதுமட்டுமன்றி, ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் ஜோதிகா மனதளவில் தான்தான் சந்திரமுகி என ஆழமாக நம்பிக் கொண்டிருக்கிறார். அதனை நீக்கிவிட்டால் சந்திரமுகி சென்றுவிடும் என எண்ணி சில தந்திரங்களைத் திட்டமிட்டு நிகழ்த்துவார்கள். இதே போலத்தான் டைலர் டுர்டன் தன்னை விட்டு நீங்குவதற்கு எட்வர்ட் சில தந்திரங்களைப் பின்பற்றியிருப்பார்.
இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு கூடுதல் பிளஸ். குறிப்பாக கிராபிக்ஸ் உதவியால் சில காட்சிகளைப் பதிவு செய்திருப்பார்கள். இதுமட்டுமன்றி, அப்போதே பல புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றி திரைப்படத்தின் விஷுவல்களை தரமான வடிவில் அமைத்திருப்பார்கள்.
மேலும் இத்திரைப்படத்தின் நடித்திருந்த எட்வர்ட் நார்டன், பிராட் பிட், ஹலெனா கார்டர் என மூவரும் நடிப்பின் உச்சத்தைத் தொட்டிருப்பார்கள். பிராட் பிட்டின் உடலமைப்பும், மேனரிசமும் பல இளைஞர்களை அப்போது ஈர்த்திருக்கிறது. அவரின் அந்தக் கதாபாத்திர வரைவு மற்றும் உடல்மொழியை நகலெடுத்துப் பல படங்கள் அதன் பின்னர் வெளியான வரலாறும் உண்டு. பிராட் பிட்டும் சில பேட்டிகளில் அவர் வாழ்வில் ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் முக்கியமான பங்கு வகித்திருக்கிறது எனப் பகிர்ந்திருக்கிறார்.
+ There are no comments
Add yours